பித்தப்பூ

 பித்தப்பூ

க நா சு

மின்நூல்

116 பக்கங்கள்



மனித வாழ்வில் பொருளீட்டுதலை முதன்மையாக கருதும் அதே வேளையில், மனித நேயத்துடனும் செயல்படுபவர்களை பிழைக்கத் தெரியாதவர்களாய், பித்துப் பிடித்தவர்களாய் கருதுகிறது நம் சமூகம்.


 அது போன்ற ஒரு நபராக இருக்கிறார் பத்மநாப ஐயர். மூதாதையர் வைத்துவிட்டுப் போன சொத்துக்களை கணிசமாக குறைத்துவிடுகிறார்.


 தாராள மனதுடன் அவர் தரும் விருந்துகளுக்குகூட கிண்டலும், கேலியும் மட்டுமே எதிர்வினைகளாக முதுகுப்புறம் கிடைக்கின்றன.


'ஒரு மனிதனைப் பற்றிய முழு உண்மையும் நெருங்கியிருப்பவர்களுக்குகூட பூரணமாக தெரிவதில்லை. இதில் தவறு ஒன்றும் இல்லை'.


 குறிப்பிட்ட புள்ளிகளில் இணையும் மனிதர்கள் முரண்படும் தருணங்களில் சிந்திக்க வேண்டிய வரிகள் மேற்கண்டவை.


 நன்கு படித்து நல்ல வேலையில் அமர்ந்து விட்ட தியாகராஜன் விபத்தொன்றில் சிக்கி புத்தி பேதலிப்புக்கு ஆளாகிறான்.


 அவனது சிக்கல் அவனை முழுமையாக வீழ்த்தி விடாதபோதும், அவ்வீழ்ச்சியை அவனால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.


 பாதுகாப்பான வாழ்வு முறையை புறக்கணித்து கலை, இலக்கியம் என்று மேதமையுடன் இருப்பவர்களையும் பெரும் வியப்புடன் நினைவுகூர வைத்துவிடுகிறது இந்நாவல்.


 ஒரு மனிதனின் சிறப்புகளை, திறந்த மனதுடன் எத்தனை பேர் வாழ்த்திட எண்ணுகிறார்கள்?


 கற்கும் பருவத்தில் வியத்தகு சாதனை புரியும் தியாகுவை மனமுவந்து ஊக்கப்படுத்தாதவர்கள், அவனது எதிர்பாராத வீழ்ச்சியைக் கண்டு ஆசுவாசப்படுகிறார்கள்.


 'சிறிய மனம் கொண்டவர்கள்தான் இங்கு அதிகம்' என்கிறார் க.நா.சு


 தெளிந்த நீரோடை போல் நகர்ந்துகொண்டிருக்கும் வாழ்வில் பெரும் அதிர்வுடன் நிகழ்ந்துவிடும் துயரம் அப்போதைய நேரங்களில் இருண்டு விட்ட நிலையை தருவிப்பினும், நாட்களின் நீட்சியில் மனம் சமநிலை அடைந்து விடுகிறது.


 தாளமுடியாத துக்கம், வாரத்திற்கு ஒருமுறை, மாதம் ஒருமுறை என்ற வகையில் தனது மீட்டெடுப்பை நிகழ்த்தி மனதின் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து விடுகிறது.


 சாத்தனூர் மனிதர்களை குறித்த க.நா.சுவின் மற்றுமொரு சிறப்பான நாவல் இது.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கட்டுரைகள்