இசை

 காலத்தை இசைத்த கலைஞன்

இளையராஜா80

ஜி குப்புசாமி

மின்நூல்

காலச்சுவடு பதிப்பகம்

37 பக்கங்கள்



மனம் முழுவதும் அன்பும், மகிழ்ச்சியும் நிரம்பி வழிந்த தருணங்களிலும், நம்பிக்கைகள் அனைத்தையும் இழந்து வெறுத்துப் போயிருந்த நாட்களிலும் துணையாக இருந்தது ராஜாவின் இசைதான்.


 பத்து வயதுகூட பூர்த்தியாகாத நாட்களில் கேட்க நேர்ந்த ராஜாவின் திரையிசைப்பாடல்கள் இவ்வளவு ஆண்டுகள் கழித்து கேட்கும்போதும் விவரிக்க இயலாத ஒருவித பரவச நிலையை உணர்த்திவிடுகிறது.


 ராஜாவுடனான சந்திப்பு பற்றிய குறிப்புகள், மின்னம்பலம் கட்டுரை, தி இந்து தீபாவளி மலர் கட்டுரை என மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது இச்சிறுநூல்.


'ஏகாக்கிரக சிந்தனையோடு, மிக மிகக் கடுமையான உழைப்பில் தன்னைத்தானே வருத்திக்கொண்டு, தொழிலின் மீது அளப்பரிய பக்தியோடு, தன்னை அர்ப்பணித்துக் கொண்ட வகையில் இளையராஜா அபூர்வத்திலும் அபூர்வமான கலைஞர்தான்'.


 ஜி குப்புசாமி அவர்களின் மேற்கண்ட வரிகளே ராஜாவின் மீதான அவரது பிரம்மிப்பை விளக்கி விடுகிறது.


 ஒவ்வொருவரையும் ராஜாவின் ஒவ்வொரு பாடல் முழுமையாக வசீகரித்து, அகத்தில் நீங்காது நிலைபெற்று விடுகிறது.


 எனக்கு அவ்வகையில் மனதை ஈர்த்த ராஜாவின் பாடல் 'அரங்கேற்ற வேளை- ஆகாய வெண்ணிலாவே'.

Comments

  1. 'சங்கீதப் நிர்வாகத்தின் நதிமூலம் ' தி இந்து நாளிதழின் தீபாவளி மலரில் வெளிவந்த கட்டுரை . நடுப்பக்க கட்டுரை அல்ல. இருந்தும் முதல் வாசகரிடமிருந்து முதல் எதிர்வினை. நன்றி சரவணன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்