தேடல்
தேடல்
பொன்னீலன்
என் சி பி எச்
93 பக்கங்கள்
மருத நிலத்து மக்கள் உணர்வுபூர்வமானவர்கள். அவ்விடம் விட்டு நீங்கி நெய்தல் பகுதிகளில் வசிப்பவர்களிடமும் கூட போற்றுதலுக்குரிய ஈகை, துணிவுடன் அநீதியை எதிர்த்தல் போன்ற குணங்களைக் காண இயலும்.
மிகை உணர்ச்சி கொண்டவர்களாகவும், உள்ளத்தில் இருப்பதை வலிந்து மறைத்து பழகாதவர்களாகவுமே அம்மக்கள் நீடிக்கிறார்கள்.
பொன்னீலனின் இந்நாவல் கடலோர மக்களின் நிச்சயமின்மை மிகுந்த வாழ்வு, பண ஆசை, குரோதம், காதல், நட்பு ஆகிய குணங்களை மிகையின்றி சிடுக்கற்ற மொழியில் விவரித்துச் செல்கிறது.
சிறு சிறு அத்தியாயங்களில் எண்ணற்ற பாத்திரங்களை படைத்து உப்புக்காற்றை சுவாசிக்க செய்து விடுகிறார் அவர்.
இரும்பை போன்ற உறுதியான உடலைக் கொண்ட தாசன், தாயை இழந்தபின் தந்தையின் மறுமணத்தால் அஞ்சி வீட்டை விட்டு வெளியேறி, திறன் மிகுந்த கட்டுமரக்காரனாக வாழ்கிறான்.
காதலும் கைகூடாமல், தொழிலிலும் மேன்மை அடையாமல், கடல் தாண்டவத்தில் பிய்த்தெறியப்படும் கரையோர குடிசைகளைப் போன்ற வாழ்வு நிலை அவனுக்கு விதிக்கப்பட்டு இருக்கிறது.
பொருளாதார வளர்ச்சி நிலைகளில் மனித மனங்களில் ஏற்பட்டுவிடும் நம்ப முடியாத மாற்றங்களை ஈரமுடன் எடுத்தியம்பும் நாவல் இது.
Comments
Post a Comment