நாவல்
பெத்தவன்
இமையம்
பாரதி புத்தகாலயம்
40 பக்கங்கள்
உயிர்மை இலக்கிய இதழில் இமையத்தின் நெடுங்கதைகளை வாசித்து வியந்திருக்கிறேன். உரையாடல் மொழியில் அமைந்திருக்கும் எழுத்துநடை அவரது தனித்துவம்.
சமூகத்தை சாதியம் தனது கட்டுக்குள் வைத்திருப்பதை மிகையின்றி உணர்த்திவிடும் கதை இது.
ஆணவக் கொலைகளும் அவமானம் நேர்ந்து விட்டதாக கருதி மேற்கொள்ளப்படும் சுய மரணங்களும் அவ மரணங்களாகவே இருபத்தியோராம் நூற்றாண்டிலும் தடையின்றி தொடர்ந்து கொண்டிருப்பது நாகரீக சமூகத்திற்கு சவால் அளிப்பவை.
சாதியப் பெருமை பேசி மகிழ்பவர்கள், தாம் சார்ந்திருக்கும் சாதியில் பின்தங்கிய பிரிவினரையே பெரும் ஏளனமாக பரிகசிக்கும் நிலையே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கல்வி கற்றலும், இருதரப்பு புரிதலுடன் கூடிய சுயமரியாதைக் காதல் திருமணங்களும் ஆனவக் கொலைகளுக்குத் தீர்வாக அமைய முடியும்.
ஒன்றிரண்டு சாதியினர் மட்டும் குடியிருப்பதாக அல்லாமல், எல்லா பகுதிகளும் மதம் மற்றும் சாதி பிரிவினர்கள் மகிழ்வுடன் வாழுமிடங்களாக மாற்றமடையும் நாட்கள் மட்டுமே ஒற்றுமையையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் மனித சமூகத்திற்கு அளிப்பதாக அமையும்.
மிக சிறந்த கதை, படிக்கும் பொது திக் திக்னு தான் இருக்கும். மணலூரின் கதை கூட உயிர்ம்மையில் படித்தாக ஞாபகம். இமயம் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்.
ReplyDeleteமிக்க நன்றியும் அன்பும் பிறைசூடி
Delete