குழந்தை வளர்ப்பு
உச்சி முகர்
விழியன்
பாரதி புத்தகாலயம்
63 பக்கங்கள்
குழந்தைகளின் உலகம் உண்மையும், தூய்மையும் நிரம்பியது. பெண் குழந்தைகள் நிறைந்திருக்கும் இல்லங்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பதுடன், மன அழுத்தத்தை நீக்கி விடுவதாகவும் அமைகின்றன.
தனது மகளுடனான உரையாடல்களை, அழகிய தருணங்களை நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் விழியன்.
கடந்த காலங்களில் நிறைவேற்றத் தவறிய கடமைகளை நினைவுபடுத்துவதாகவே அமைந்துவிட்டது இந்நூல்.
குழந்தைப்பேறு அரிதாகி விட்ட இக்காலத்தில் பிறக்கும் குழந்தைகளை மிகுந்த பிரியத்துடன் வளர்த்தெடுத்தலே எதிர்கால சமூகத்திற்கு நமது பெரும் பங்களிப்பாக இருக்கமுடியும்.
அறிவை வளர்ப்பதாகவும், காலம் கடத்துவதாகவும் எண்ணியவாறு பெரியவர்கள் சொல்லிச் செல்லும் சிறு சிறு கதைகளே குழந்தைகளின் வண்ணமயமான உலகின் கதவுகளைத் திறந்துவிடுகின்றன.
மிகுந்த ஆர்வத்துடன் செய்யும் பணிகளே அலுப்பு தோன்றாதவையாக அமைந்து விடுகின்றன.
குழந்தை வளர்ப்பும் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டிய செயல்தான் என்பதை சிறப்பாக வலியுறுத்திவிடும் நூல் இது.
Comments
Post a Comment