தத்துவம்

 தீர்க்கதரிசி

கலீல் ஜிப்ரான் 

ஃபிங்கர் பிரிண்ட்

135 பக்கங்கள்



தனது நாட்டிற்கு திரும்பிச் செல்லும் பொருட்டு கப்பலுக்கு காத்திருக்கிறார் அவர். கப்பல் வந்துவிட்ட வேளையில் திரும்பிச் செல்லத் தயக்கமும் பிரிவுத் துயரமும் ஏற்படுகிறது.


உண்மையில் அன்பு, பிரியும் வேளையில் பல மடங்கு அதிகரித்து விடுகிறது. ஒரே ஒரு பெண் மட்டுமே அவருக்கு ஆறுதல் அளித்து திரும்பிச் செல்லுமாறு வேண்டுகிறாள்.


சூழ்ந்திருக்கும் அனைவரும் அவரது ஞானத்தை சில மணித்துளிகளாவது பகிர்ந்து கொள்ள வேண்டுகின்றனர்.


 பெரும் விளக்கங்களை கோரும் சிறுசிறு வினாக்களை எழுப்புகின்றனர். ஒவ்வொரு வினாவுக்கும் சில பக்கங்களில் விளக்கங்கள் அமைந்து விடுகின்றது.


 11 ஆண்டுகளை இந்நூலுக்கான ஆக்கத்தில் கலீல் ஜிப்ரான்  செலவிட்டதாக நூலின் துவக்கத்தில் குறிப்பு இடம்பெறுகிறது.


 இச்சிறு நூலை வாசிக்கையில் ஓஷோவின் எழுத்துக்கள் கூட நினைவுக்கு வந்துவிட்டன. ஓஷோ உள்ளிட்ட கார்ப்பரேட் சாமியார்களுக்கு உந்துதலாக இதுபோன்ற எழுத்துக்களே அமைந்திருக்கவும் கூடும்.


 ஜிப்ரானின் ஓவியங்கள் இந்நூலின் சிறப்பம்சங்களுள் ஒன்று. தனக்கு எதுவும் தெரியாது என்பது மட்டுமே தனக்குத் தெரியும் என்று ஜென் துறவி ஒருவர் கூறியதை வாசித்தது நினைவுக்கு வந்தது.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்