கல்வி
ஒழுகும் குடிசையும் ஒளிரும் கல்வியால் மருத்துவர் திட்டக்குடி செந்தில்
கருஞ்சட்டை பதிப்பகம் 86பக்கங்கள்
திராவிட இயக்கங்கள், இட ஒதுக்கீட்டின் அவசியம், நீட்தேர்வு ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்த குறைந்தபட்ச புரிதல்களை ஏற்படுத்தி விடுகிறது இச்சிறுநூல்.
1 முதல் 12-ஆம் வகுப்பு வரை கற்று, உயர்ந்த மதிப்பெண்கள் பெற்ற போதிலும் அவற்றை கருத்தில் கொள்ளாமல் நீட் நுழைவுத்தேர்வை மட்டுமே கவனத்தில் கொண்டு அம்மதிப்பெண்ணின் அடிப்படையில் மருத்துவக் கல்வி அனுமதி அளிக்கப்படுகிறது.
கிராமப்புற பள்ளிகளில் தமிழ்வழியில் பயிலும் குழந்தைகள் இம்முறையினால் பாதிக்கப்படுவதை அறிகையில் இதற்கு பின்னுள்ள அரசியலை எளிதாக விளங்கிக்கொள்ள இயலும்.
திராவிட இயக்கங்களின் எழுச்சியும், இடஒதுக்கீடும் இல்லாமல் போயிருந்தால் இன்றைய கல்வி, சமூக வளர்ச்சிகள் சாத்தியமற்றதாகி இருந்திருக்கும்.
அன்றைய நாட்களில் அரசுப் பள்ளிகள் சிறப்பாக இயங்கியதாக பதிவு செய்திருக்கும் ஆசிரியருக்கு இன்றைய சூழலில் அரசுப்பள்ளிகளின் நெருக்கடியான நிலைகளை குறித்த புரிதல் இருப்பதாக தெரியவில்லை.
கல்வி ஒன்றை மட்டுமே கொண்டு தலைமுறைகளை கட்டமைத்த நிகழ்வுகளை அறிகையில் மிக்க மகிழ்ச்சி. எனினும் இந்நிலை எத்தனை காலத்திற்கு நீடிக்கும் என்று எண்ணும் போது மிகுந்த அயர்ச்சியே ஏற்படுகிறது.
Comments
Post a Comment