கதைகள்

 பொன்னுலகம்

சுரேஷ் பிரதீப்

அழிசி பதிப்பகம்

172 பக்கங்கள்



சுரேஷ் பிரதீப்பின் 10  சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இந்நூல்.


 'இழந்த பின்னும் இருக்கும் உலகம்' என்றொரு கட்டுரையை பல ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். கவிஞர் சுகுமாரன் எழுதிய கட்டுரை அது. பள்ளி நினைவுகள் குறித்த அக்கட்டுரை மிகவும் ஈர்த்தது.


 இத்தொகுப்பின் முதல் கதை 'வேம்பு' அவ்வாசிப்பை நினைவுபடுத்தியது. நண்பர்களுடனான உரையாடல்கள், தூய்மையான ஈர்ப்புகள், ஆசிரியர்கள் மீதான அபிமானங்கள், மோதல்கள் என எத்தனைையோ தருணங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் நிரம்பியுள்ளன.


 முழுமையாக அறிந்து உணர இயலாத தரவுகள் அமானுஷ்யங்களாகவே நீடித்து விடுகின்றன. 'கற்றாழைக் கிணறு' அவ்வகையில் அமைந்துவிட்ட நல்ல புனைவு.


 பெருந்தினையும், கைக்கிளையும் இல்லாத மனித வாழ்வு ஏது? 'மோகமுள்' யமுனாவை ஓரளவு நினைவுபடுத்தி விடுகிறார் 'பூரணி'.


 குளிர்ந்த நிழல் போன்ற பாதுகாப்பு உணர்வை, ஆசுவாசத்தை அளிக்கும் இல்லத்திற்கு மூத்த பெண்கள் தமக்கேயுரிய  மன அழுத்தங்களை பகிர இயலாதவர்களாகவே இருக்கின்றனர். இறுதி அத்தியாயத்திற்கு பிறகு எத்தனையோ விடயங்கள் தெரிய வருகின்றன.


 எழுத்தாளர் ஒருவருடனான சந்திப்பை விவரணை செய்யும் 'முதல் அடி' புனைவு மிகவும் சிறப்பு.


 நிர்வாக அடுக்குகளின் உயர்நிலையில் நீடிக்கும் அலுவலர்களின் முடிவுகள் பலவித தாக்கங்களை பலரது வாழ்வில் தோற்றுவிக்கின்றன.


 வாழ்தலின் கசப்புக் கூறுகள் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியின் மையக் கூடமாக நிலை பெற்றுவிடுகிறது 'முடிவின்மையின் வடிவம்' கதையில்.


 தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் புரிதலற்ற பல சிக்கல்கள் மனிதனின் வாழ்வில் செயற்கைச் சுவர்களை நிறுவி அலைக்கழிக்கின்றன.


 மருத்துவமனைக் காத்திருப்புகளை ரசனையுடன் விளக்கும் 'மெல்லிய இடர்', சமூக ஊடகங்களின் நேர விழுங்கல்கள், ஆதிக்கம், தனிமனித விருப்பு சார்ந்த தரவுகளை வியாபாரமாக்குதல் குறித்த புனைவு 'பொன்னுலகம்' போன்ற கதைகள் புத்தம் புதிய வாசிப்பு அனுபவங்களை அளிக்கின்றன.


 சுரேஷ் பிரதீப் நம்பிக்கை அளிக்கும் மற்றுமொரு புதிய தலைமுறை எழுத்தாளர்.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

நாவல்

நாவல்