நாவல்
அவன் காட்டை வென்றான்
கேசவ ரெட்டி
தமிழாக்கம் ஏஜி எத்திராஜுலு
நேஷனல் புக்ட்ரஸ்ட் வெளியீடு
நிறைமாத கர்ப்பிணியான தனது பன்றியைத் தேடி ஒரு இரவு முழுவதும் போராடித் தவிக்கும் கிழவன் ஒருவனின் கதை இது.
சாண்டியாகோ கிழவனின் போராட்டம் கடல் பின்னணியில் அமைவது போன்று, பெயரிடப்படாத இக்கிழவனின் போராட்டம் காட்டின் பின்னணியில் அமைகிறது.
100 பக்கங்களுக்கும் குறைவான இக்கதையை எளிதாக வாசித்துவிட இயலாது. நுட்பமான வாசிப்பைக் கோரும் எழுத்துகள் இவை.
காடு, கானுயிர் குறித்த வியப்பளிக்கும் அறிவுநுட்பம் வாய்ந்தவன் அக்கிழவன்.
சிட்டுக்குருவியின் ஓசையைக் கேட்டு பன்றியின் இருப்பிடத்தை அறிந்து கொள்கிறான். அதன் 10 குட்டிகளையும் அழகு நிலாக்களாக காண்கிறான்.
அழகுக்காகவே மேற்கோள் காட்டப்படும் நிலவு, பன்றியுடன் ஒப்பிடப்பட்டு இகழப்படுகிறது.
மூர்கத்தனமாக தன்னைத் தாக்கி பெரும் காயங்களை ஏற்படுத்தியபோதும், தாய்ப்பன்றி மற்றும் அதன் குட்டிகளின் மீதான கிழவனின் அன்பும், அக்கறையும் மாறுவதில்லை.
பாறை போன்ற அவனது கால்களில் மிதிபட்டு காட்டு முட்கள்கூட நசுங்கிப் போகின்றன.
சிட்டுக்குருவியின் உதவியால் மகிழும் அவன், தொடர்ச்சியான அதன் ஓசை நரிகளை வரவழைப்பதையறிந்து, கோபத்துடன் கத்தியை வீசிக் கொன்று விடுகிறான்.
ஒரு மொந்தைக் கள்ளைக் குடித்துவிட்டு பன்றியை தேடிக் கிளம்புபவன், பசிக்களைப்பில் காட்டு முயல் ஒன்றை குறி பார்த்து ஈட்டி வீசிக், கொன்று பசியாறுகிறான்.
பூவரசஞ்செடியாக, பூவரச மரம் சுட்டப்படுகிறது. காட்டின் பிரம்மாண்டத்திற்கு முன்பு எதுவும் மிகச்சிறியவைதானே?
குட்டிகளை காக்கும் ஆவேசத்தில் கிழவனையும், நரிகளையும் கொடூரமாகத் தாக்குகிறது தாய்ப் பன்றி.
50க்கும் மேற்பட்ட நரிகள் அவ்விடத்தைச் சுற்றி வளைக்கையில், கடினமான முடிவொன்றை எடுக்கிறான் கிழவன்.
மிக உறுதியாக குடிசையை விட்டுக் கிளம்பியவன், தனது முயற்சியில் வென்றானா என்பதே கதை.
Comments
Post a Comment