நாவல்




உயிரின் யாத்திரை

எம் வி வெங்கட்ராம்

காலச்சுவடு பதிப்பகம்

79 பக்கங்கள்


 முன்னுரையாக திருமூலரின் திருமந்திரப் பாடல் இடம்பெறுகிறது. 'உயிரின் யாத்திரையில் உடல் ஒரு சத்திரம்' என்று குறிப்பிடும் எம் வி வெங்கட்ராம் படைத்திருக்கும் குறுநாவல் இது.


 முடிவற்ற ஆன்மீகத் தேடலின் ஒரு துளியாகவே இக்குறு நாவலைப் படைத்திருக்கிறார் எம்விவி.


 ராஜா, ராணி,  கோபு, சதாசிவம், லீலா (மீனா) என மிகக் குறைவான எண்ணிக்கையில் கதைமாந்தர்கள்.


 பாலியல் வரம்பு மீறல்கள் ஆரம்பகட்ட கிளர்ச்சியை ஏற்படுத்தி இறுதியில் தீர்க்க இயலாத பெரும் இக்கட்டுக்குள் மட்டுமே மனிதனை செலுத்துகிறது.


 தவறு செய்யும் துணிச்சல் அற்றவனாக விளங்கும் ராஜா, பெரும் குற்ற உணர்விற்கும், நகைப்பிற்கும் ஆளாகின்றான்.


 ஆன்மீகத் தேடலில் ஈடுபடும் சதாசிவம், புரிந்துகொள்ள இயலாத நபராகவே அறியப்படுகிறார்.


 சிறுசிறு அத்தியாயங்களில் ஆங்காங்கே தேவைக்கேற்ப திருமந்திரப் பாடல்கள் இடம் பெற்றிருப்பது இக்குறுநாவலுக்கு மிகவும் பொருத்தமாக அமைகிறது.


 'ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே

 காத்த மனையாளை காமுறும் காளையர் காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே'


 பாடலில் செவ்வியல் தன்மை மிளிர்கிறது.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்