நாவல்



பாரபாஸ் (அன்புவழி)

பேர் லாகர்க்விஸ்ட்

க.நா.சு

மின்நூல்

190 பக்கங்கள்



 மரண தண்டனை நிறைவேற்றலின் இறுதித் தருணத்தில் தப்பிவிடும் பாரபாஸ், இறையுணர்வு அற்றவனாக இருக்கிறான்.


 இறைதூதரின் வாதை மிகுந்த மரணம் அவனை பாதிக்கவில்லை.


 அவரது தாயின் துயர்மிகு கண்ணீரை அருகிலிருந்து காண்கிறான். இறை தூதரின் வழிநடப்பவர்களால் அடையாளம் காணப்பட்டு விரட்டப்படுகிறான்.


 மரண தண்டனை நிறைவேற்றும்போது பூமி இருட்டி விடுவதும், சூழ்ந்திருக்கும் மக்களின் கையறு ஓலமும் அவனை பாதிக்கின்றன.


 சுரங்கத்தில் தனது இணை அடிமையின் எண்ண ஓட்டங்களை மதிப்புடன் செவிமடுக்கவும், கழுத்துச் சங்கிலியில் இறை அடையாளத்தை இட்டுக் கொள்ளவும் சம்மதிக்கிறான்.


 விசாரணையின்போது இருவரின் வாதங்களும் முரண்படுகையில், இணைஅடிமை சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறக்கிறான்.


 கொள்ளையனாக, தந்தையைக் கொன்றவனாக அடையாளப்படுத்தப்படும் பாரபாஸ், தனது உள்ளுணர்வுக்கு புறம்பாக நடந்து கொள்வது இல்லை.


 இணைஅடிமை தனது மரண தண்டனையைக் காட்டிலும், பாரபாசின் மறுமொழிகளினாலேயே (விசாரணையின்போது) பெரிதும் வருந்துகிறான்.


 அடிமைவோட்டிகளின் மனிதாபிமானமற்ற அணுகுமுறைகளும், சுரங்கத்தின் இருளும் காட்சிகளாக விரிகின்றன.


 'விரோத பார்வைகள் அவன் எங்கு சென்றாலும் அவனைப் பின் தொடர்ந்தன.எரியும் கண்களில் வெறுப்புடன் எல்லோரும் அவனைப் பார்த்தார்கள். அவன் எதிரில் இல்லாதபோது கூட அந்த வெறுப்பு துவேஷம் அவர்களை விட்டு மறைந்த மாதிரி தெரியவில்லை.'


 க.நா.சுவின் சிரத்தைமிகு மொழிபெயர்ப்பு அயல் இலக்கியங்களை விரைவாக தமிழுக்கு கொண்டு வருவதில் அவருக்கிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.


ஜலம், தாலி போன்ற வார்த்தைகள் மூலப்படைப்பிலிருந்து வாசகனை அந்நியப்படுத்துவது போன்று அமைந்திருப்பினும், வாசிப்பின் மீதான ஆர்வத்தை மட்டுப் படுத்தவில்லை.


 'எல்லோருடைய கடவுளா அவர்? அப்படியானால் சக்தி உள்ளவராகத்தான் இருக்க வேண்டும். அவர் சக்தியின் ஆதாரம் என்ன?


 "அன்பு"


 ஆம் சக்தியின் ஆதாரம் எப்போதும் 'அன்பு' ஒன்றுதான் என்றே தோன்றுகிறது.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்