கட்டுரைகள்
உணவு நூல்
மயிலை சீனி வேங்கடசாமி மின்நூல்
97 பக்கங்கள்
உணவை உண்பது அவரவர் விருப்பத்தையும், பழக்கத்தையும் பொறுத்தது.
ஆகவே வைத்தியரைத்தவிர மற்றவர்கள் இந்த உணவைத்தான் உண்ண வேண்டும், இந்த உணவை உண்பது கூடாது என்று சொல்ல தகுதியற்றவர்கள் என்று கூறும் மயிலை சீனி வேங்கடசாமி இந்நூலில் முன்னரே நமக்கு அறியக் கிடைத்த எளிய விவரங்களை தகவல் பகிர்தலைப் போன்ற நடையில் சொல்லிச் செல்கிறார்.
இறைச்சி உணவு உண்ணாதவர்கள், இறைச்சியோடு தொடர்புடைய பால், வெண்ணெய்,நெய் போன்றவைகளை எடுத்துக் கொள்வது நலம் என்று கூறுகிறார்.
தானியங்கள், பயறுகள், கீரைகள் போன்ற தலைப்புகளில் அவர் அளிக்கும் தகவல்கள் வாசித்து அறிந்துகொள்ள வேண்டியவை.
நவீன காலங்களில் இறைச்சி உணவு உண்ணாமல் தவிர்ப்பவர்களின் முன்னோர், பௌத்த காலத்திற்கு முன்னர் இறைச்சி உணவை முதன்மையாகக் கொண்டிருந்தனர் என்றும் கூறுகிறார்.
உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் தேவையான உட்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்த எளிமையான குறிப்புகளை கொண்டிருக்கும் பயனுடைய நூல் இது.
Comments
Post a Comment