கட்டுரைகள்




ஆறில் ஒரு பங்கு

பாரதி

மின்நூல்

37 பக்கங்கள்


 பாரதியின் உரைநடை, ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய சமூகச் சூழல்களை, அரசியல் நிலைகளை, ஏற்றத்தாழ்வுகளை பேசுகிறது.


 பிரம்ம சமாஜத்தின் மேல் பற்றுக் கொள்ளும் கோவிந்தராஜன், மீனாம்பாளை புறக்கணிக்க துணிகிறான்.


 காளியின் ஆணையை ஏற்று விஷமருந்தும் மீனாம்பாள், காய்ச்சலில் விழுந்து உயிர் தப்புகிறாள்.


 ஆறில் ஒரு பங்கு நீடித்திருக்கும் உழைக்கும் மக்கள், ஒடுக்கப்பட்டோராக காலந்தோறும் தொடர்கிறார்கள்.


 சமூக அடுக்குகளைப் வலுவாக கட்டுடைக்க பாரதி தயங்குவதில்லை என்பது வாசகன் அறியாத விஷயம் அன்று.


 மீனாம்பாளின் வீணை இசையை, அவளது தந்தையின் குறட்டை ஒலி எவ்வகையிலும் தொந்தரவு செய்வதில்லை என்பது போன்ற பகடிகள் இக்குறு நாவலில் இடம் பெறுகிறது.


 பாரதியின் கவிதைகள், கட்டுரைகள் அளித்திடும் மாபெரும் தரிசனங்களுக்கு சற்று குறைவானதாகவே தோற்றமளிக்கும் கதைப் புனைவுகளில் ஒன்று  இக்குறுநாவல்.


 'பிறவி மாத்திரத்தாலே உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கூடாது'


 காலங்கள் கடந்து பாரதியின் மீதான ஈர்ப்பு குன்றாதிருக்க மேற்கண்ட வரியும் ஏதுவாக அமைகிறது.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்