கதைகள்
வணக்கத்துக்குரிய எலும்புத் துண்டுகள்
பேர் லாகர்க்விஸ்ட்
தமிழில் ஜி குப்புசாமி
வம்சி புக்ஸ்
184 பக்கங்கள்
'இருட்டு சுவாசத்தோடு உள்ளே சென்று நிரம்பி விடும் அபாயம் இருந்தது'.
அவரவரின் அப்பாக்களின் நினைவுகளை மீட்டெடுப்பதாக அமைந்து விட்ட கதை 'அப்பாவும் நானும்'.
ஒன்றாம் வகுப்பு சேர்ப்பதற்காக நான்கு வயதில் (ஆம்! ஒரு வயதைக் கூட்டித்தான்) என் அப்பா, என் கரம்பற்றி முட்புதர்களுக்கு இடையே ஒற்றையடிப் பாதையில் அழைத்துச் சென்றது தெளிவாக நினைவுக்கு வந்தது.
வாசகனை சிரமத்திற்குள்ளாக்காத அழகிய மொழிநடை, மூலப் படைப்பையும் எவ்வகையிலும் சிதைத்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது.
அனைத்திலும் நல்லவற்றை மட்டுமே பார்க்கத் தெரிந்த லிண்ட்கிரன், இயலாமையை பொருட்படுத்தாது நம்பிக்கையுடன் ஒளிர்விடும் ஆன்மா அவனுடையது.
பயன் உள்ளவனாக வாழுதல் குறித்த அவனது கூற்றுகள் சிந்திக்க வைப்பவை.
ஏதோ ஒன்றை இலக்காக கொண்டு, அலைந்து திரிந்து, அழகியல் தன்மையை வாழ்வில் தொலைத்து விடுபவர்கள் குறித்த மறைமுகமான அல்ல, நேரடியான பகடியாகவே லாகர் க்விஸ்டின் புனைவுகள் தோன்றுகின்றன.
கோபுரத்தின் உச்சியில் தலைகீழாக நிற்கவும், பின்பு அங்கிருந்து விழுந்து சாகவும் நியமிக்கப்படுபவன் பெறும்பணம் (எங்ஙனம்?) எவ்வகையில் அவனுக்கு உதவக்கூடும்?
போர்கள் நிகழ்த்தி விடும் அழிவும், வடுக்களும் பகடியாகவும், ஆற்றாமையை வெளிப்படுத்தும் எழுத்துக்களாகவும் அமைகின்றன 'சிறுவர்கள் ராணுவம்' கதையில்.
சிறு அளவிலும் அலுப்பை ஏற்படுத்தாத வாசிப்பு அனுபவத்தை அளிப்பவை இத்தொகுப்பில் உள்ள கதைகள்.
திருமண நிகழ்வுகளின் சுகமான மீட்டெடுப்பு 'திருமண விருந்து' கதை.
காட்சி ஊடகங்களில் கட்டமைக்கப்படும் பிம்பங்கள் அளவுக்கு நூலினை ஏந்தி தனிமையில் ஆழ்ந்து வாசித்து கொண்டிருப்பவனுக்கு இக்கதை அளிக்கும் உவகை சிலிர்க்க வைக்கிறது.
மூன்று ஆண்டுகளாக இப்புத்தகத்திற்காக வம்சி பதிப்பகத்தில் வாதிட்டு வந்திருக்கிறேன்.
எனது மதிப்புமிகு ஆசிரியர் ஜி குப்புசாமி அவர்கள் கையெழுத்திட்டு இந்நூலை அனுப்பி வைத்திருக்கிறார். என்போன்ற எளிய வாசகனின் பணிவான வணக்கம் அவருக்கு என்றும் உரியது.
நூலினை அழகியலுடன் வெளியிட்டிருக்கும் வம்சி பதிப்பகத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.
வணக்கத்துக்குரிய எலும்புத் துண்டுகள் மொழிபெயர்ப்பு வாசகர்கள் அனைவரும் வாசித்து மகிழ வேண்டிய நூல்.
Comments
Post a Comment