கதைகள்
அவரவர் வழி
சுரேஷ்குமார இந்திரஜித்
மின்நூல்
118 பக்கங்கள்
இயல்பான மனிதர்களின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை நேரடியாக எளிய எழுத்துக்களில் பதிவு செய்கிறார் சுரேஷ்குமார இந்திரஜித்.
புனையப் பட்டிருக்கும் பெயர்களிலேயே அவரது எள்ளல் தொனிக்கிறது.
நிகழ்கால போலி வாழ்வு, கடந்த காலங்களில் மறக்கவியலாத கசடுகளை சுமந்த நிலையில் தள்ளாட்டங்களுடன் சுழன்று கொண்டிருக்கிறது.
திருடன் உருவாதல், தொடர்ச்சியான களவு செயல்கள் தேய்வழக்கான புனைவாக இருப்பினும் கதையின் முடிவு கலைஞனை மீட்டெடுக்கிறது.
இழத்தலின் நினைவுகள், அடையவியலாதவற்றின் மீதான பொங்கிவழியும் மோகம், சிறுமைத்தனங்கள் வலுவாக எழுதப்பட்டிருக்கின்றன.
தவறான வழிகளில் விரைவாக ஈட்டப்படும் பணம், அதனினும் தவறான, விரைவான வழிகளிலேயே பயணிக்கிறது.
இழப்பின் வலிகளையும், நிகழ்கால தவிர்க்கவியலா சங்கடங்களையும் மட்டுமின்றி, வாழ்தலின் அவசியங்களையும் வாசகனுக்கு உணர்த்தி செல்கின்றன இத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதைகள்.
Comments
Post a Comment