கட்டுரைகள்




பௌத்தக் கதைகள்

மயிலை சீனி வேங்கடசாமி

மின் நூல்

123 பக்கங்கள்


 பௌத்த மதம் தோன்றி வளர்ந்துவந்த காலங்களின் நிகழ்வுகளை, வரலாற்றுத் தகவல்களை 16 கதைகளாக புனைவில் வடித்துள்ளார் மயிலை சீனி வேங்கடசாமி.


 சிக்கலற்ற, நேர்த்தியான மொழிநடை அமையப்பெற்ற கதைகள் இவை.


 அரண்மனையை விட்டு நீங்கிய சித்தார்த்தர், அன்றையதினம் சேகரிக்கும் பிச்சைசோறு முகச்சுளிப்பை அவருக்கு ஏற்படுத்தி, தெளிவையும் உண்டாக்குகிறது.


 தேவதத்தன், அஜாதசத்துருவின் துரோகங்கள் குறித்த வரலாற்று குறிப்புகளும் கதைகளில் அழகியலுடன் புனையப்பட்டுள்ளன.


 கள்வனை பெரிதும் விரும்பி கணவனாக ஏற்றுக் கொள்ளும் பெண், அவனது முட்டாள்த்தனமான சதிச் செயல்களை அறிந்து பெரிதும் வருந்தி, வேறு வழியின்றி அவனை வீழ்த்தி துறவுக்கோலம் பூணுகிறாள்.


 பெரும் செல்வந்தரின் மகள், புகுந்த வீட்டில் கடைபிடிக்கும் நெறிமுறைகள் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் செவ்வியல் தன்மை கொண்டிருக்கிறது.


 மரணத்தின் நிதர்சனத்தையும், வாழ்வின் நிலையாமைகளையும் மட்டுமின்றி, வாழ்தலின் இனிமையையும் விளக்கிவிடும் கதைகள் இவை.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்