கட்டுரைகள்




கொள்ளையோ கொள்ளை

ஜே சி குமரப்பா

தமிழில் மீ.விநாயகம்

மின்நூல்

90 பக்கங்கள்


வரலாற்றுப் பாட நூல்கள் வாயிலாக ராபர்ட் கிளைவ், இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு வழிகோலியவராக, வெற்றியாளராக அறியப்பட்டிருக்கிறார்.


 இந்நூலை வாசிக்கையில் தட்டையான அப்புரிதலும், பிம்பமும் உடைகின்றன.


 நிர்வாகத்தில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக அவர் இருந்திருக்கிறார். போக்கிரியாக பிறந்த நாட்டில் சுற்றித் திரிந்தவர், இந்தியாவில் குமாஸ்தா பணிக்கு வந்து படிப்படியாக வேகமாக முன்னேறி சாதித்திருக்கிறார்(!).


 ஆங்கிலஆட்சி இந்தியாவை இரக்கமின்றி நடத்தி ஏழை எளியவர்களின் செல்வங்களையும் சுரண்டியமை புள்ளிவிவரங்களுடன் இந்நூலின் விவரிக்கப்படுகிறது.


 பிரிட்டன் அரசு தனக்கான போருக்கான நிதிகளை அடிமை இந்தியாவின் தலையில் கட்டியதை அறியும்போது ஆதங்கமாக உள்ளது.


 பொய் கணக்குகளும், ஒருவர் தரவேண்டிய கடனை மற்றவர் பெயரில் எழுதுவதும், அதற்கான வட்டித்தொகையை உடனடியாக வசூலிப்பதும் ஆங்கில ஆட்சியின் கொடூரங்களை ஓரளவிற்கு புரிந்து கொள்ள வழி செய்கிறது.


 உலகின் எவ்வகையான அரசாக இருப்பினும் (கம்யூனிஸ்டுகள் தவிர்த்து) சாமானியர்களுக்கு நல்லவையாக அறியப்பட்டவற்றை நடைமுறைப்படுத்த பெரிதும் தயங்குவதற்கு அவர்தம் எண்ணிக்கையும் காரணமாக அமைந்துவிடுகிறது.


 சொற்ப எண்ணிக்கையிலான பெரும் செல்வந்தர்கள் ஆயிரக்கணக்கான கோடிகளில் கடன் பெற்று (கையூட்டின் மூலம்) அதனைத் தொடர்ந்து  தள்ளுபடியும் செய்யப்படும் அவலநிலை நமக்கு புதிதில்லை.


 அதேவேளையில் மத்திய நிலை மக்களின் வாழ்வு பெரும் போராட்டங்களுக்கு இடையே சவாலானதாக அமைந்துவிடுகிறது.


 பொதுநிர்வாகங்களில் முறைகேடுகளின் தோற்றுவாயாக ராபர்ட் கிளைவே வருங்காலங்களில் அறியப்படுவார்.


 கருணையற்ற அவரது போர் முறைகளைப் போன்று, வஞ்சகமான நிர்வாக நடைமுறைகளையும் இந்நூலின் வாசிப்பு நமக்கு அறியச் செய்கிறது.


 ஆங்கில ஆட்சியிலேயே மக்கள் மேம்பட்ட நிலையில் இருந்தனர் என்று தர்க்கம் செய்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.


 கொள்ளையோ கொள்ளை (Tamil Edition)" by ஜே. சி. குமரப்பா, மீ. விநாயகம்.


Start reading it for free: https://amzn.in/jhHH5a3

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கட்டுரைகள்