கதைகள்
தஸ்தயேவ்ஸ்கி கதைகள்
தமிழில் எம் ஏ சுசீலா
நற்றிணை பதிப்பகம்
143 பக்கங்கள்
பிரக்ஞையின்றியோ அல்லது சூழ்நிலையின் தாக்கத்தினாலோ விரும்பத்தகாத அல்லது குற்ற நிகழ்வுக்கு காரணமாகிவிடும் மனிதனின் மனப் போராட்டங்களை துல்லியமாக உணர்த்திவிடும் தருணங்களை காட்சிப்படுத்துவது இத்தொகுப்பில் உள்ள மூன்று கதைகள்.
கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின்போது அறிந்து கொள்ளப்படும் ஒரு சிறு பெண்ணின் பொருளாதார சாத்தியக்கூறுகள் ஒரு பேராசைக்கார மனிதனை துல்லியமான கணக்கீடுகளுக்கு இட்டுச் சென்று அவற்றை நிறைவேற்றிடவும் வாய்ப்பளிக்கிறது.
ரூபிள்களின் எண்ணிக்கையும், கால நீட்சியின் அடைவும் கணிப்பின்பாற்பட்டே பூர்த்தியாகிறது. பொருளாதாயங்களின் பின்னணி கொண்டே திருமணங்கள் நடைபெறுதலை விளக்கும் கதை இது.
கணநேர உந்துதலில் திருட்டில் ஈடுபட்டு விடுபவனின் மனப் போராட்டங்களை விவரித்துச் செல்கிறது 'நேர்மையான திருடன்'.
திருட்டினை ஒப்புக்கொள்ள மனமின்றியும், நம்பியவனுக்கு இழைத்துவிட்ட பிழைக்காகவும் வருந்தி தவிக்கிறான் அம்மனிதன்.
திருட்டினை நிகழ்த்துவது இவன்தானென்று உறுதியாக நம்பும் வீட்டுக்காரன், ஆதாரமின்றி தவிக்கவில்லை. அச்செயலுக்காக மட்டுமே பெரிதும் வருந்துகிறான்.
மிகையான குற்ற உணர்வுகளின் தூண்டுதலால் ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்து கொள்கிறாள் அப்பெண்.
மனைவியின் சடலத்தை மேசையின்மீது கிடத்திவிட்டு அவளுடனான தனது தருணங்களை நினைவுகளால் மீட்டெடுத்து வருந்துகிறான் அம்மனிதன்.
புறக்கணிப்புகளால் சூழப்பட்ட அவனது இளமைப் பருவம் வெறுப்புகளால் நிரம்பியிருக்கிறது.
மனைவியின் விரும்பத்தகாத நடவடிக்கைகளை கண்காணிப்பவன், ஆதாரங்களைத் தேடி முயல்கிறான்.
வழமை போல் உளவியல் சிக்கல்களின் ஆவணங்களாக தம்மை முன்னிறுத்துபவை இக் கதைகள்.
மூன்று கதைகளும் வாசகனின் மனத்தில் உளவியல் சிந்தனைகளைத் தூண்டி அகதரிசனத்துக்கு இட்டுச் செல்பவை.
தஸ்தயேவ்ஸ்கியின் மேதமை குறைவின்றி வெளிப்படும் புனைவுகள் இச்சிறுகதைகள்.
தமிழில் வடித்திருக்கும் எம் ஏ சுசீலா அம்மாவிற்கு பணிவான வந்தனங்கள்! வாழ்த்துகள்!
Comments
Post a Comment