கட்டுரைகள்




விந்தன் கட்டுரைகள்

மின்நூல்

116பக்கங்கள்


'புலமையும்-வறுமையும்' என்ற கூற்றுக்காண உதாரணங்களில் விந்தனும் ஒருவர்.


 விந்தனின் 19 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.


 பாரதி, பாரதிதாசன் குறித்த கட்டுரைகள் சிறிய அளவில் எழுதப்பட்டிருப்பினும் இந்நூலின் சிறப்பான பக்கங்கள் அவை.


 எதிரெதிர் துருவங்களாக அன்றைய நாட்களில் அறியப்பட்டிருந்த கல்கியையும், புதுமைப்பித்தனையும் தனது எழுத்துக்களில் வியந்து போற்றத் தவறவில்லை விந்தன்.


 கல்கியில் பணிபுரிபவர் வேறு பத்திரிகைகளுக்கு எழுதுதல் கூடாது என்ற நிலையில், தான் அவ்வாறு வேறு பத்திரிகைக்கு படைப்பு அனுப்பி இருப்பதாக புகார் எழுந்த சூழலில், கல்கி தன்னை கண்ணியத்துடன் நடத்தியதாக விந்தன் குறிப்பிடுகிறார்.


 கல்கியின் எச்சரிக்கையையும் மீறி, பணியிலிருந்து நீங்கியமை, 'மனிதன்' பத்திரிகை துவங்கி சந்திக்க நேர்ந்த சவால்கள், பொருளாதார இழப்புகளையும் தாண்டி மக்கள் எழுத்தாளராக விந்தன் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்.


 நூலின் இறுதிக் கட்டுரையில் இடம்பெறும் தன்னம்பிக்கை மனிதர்களின் குறிப்புகள், எக்காலத்தவரும் வாசித்து அறிந்து கொண்டு, ஆறுதல் கொள்ளவேண்டியவை.


 விந்தன் தமிழ் இலக்கியத்தின் விந்தைக் கலைஞர்களுள் ஒருவர்.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்