Posts

Showing posts from October, 2026

கட்டுரைகள்

Image
 தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்  ச தமிழ்ச்செல்வன்  895 பக்கங்கள்  மக்கள் பதிப்பு விலை ரூபாய் 300  பாரதி புத்தகாலயம்  வ வே சு ஐயர் முதல் கந்தர்வன் வரை 52 சிறுகதை ஆசிரியர்களின் படைப்புகள் குறித்த விரிவான, ஆழமான, நடுநிலையான மதிப்பீடுகளுடன் கூடிய கட்டுரைகளின் தொகுப்பு இப்பெரு நூல்.  2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது இந்நூலுக்காக தோழர் தமிழ்ச்செல்வனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதும், இந்நூலைப் பெரும்பான்மையான வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டு மக்கள் பதிப்பாக ரூபாய் 300 விலையில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது என்பதும் வாசகர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவை.  நல்ல விமர்சன நூல் ஒன்று வாசித்த படைப்புகளின் மீது அதுவரை காணாத வெளிச்சத்தை பாய்ச்சுவதோடு, வாசித்து அறியாத படைப்புகளின் மீது ஆர்வத்தையும் ஏற்படுத்த வல்லது என்று முன்பு எங்கோ வாசித்த நினைவு. ச.தமிழ்ச்செல்வனின் இந்நூல் மேற்கண்ட கூற்றுக்கு கட்டியம் கூறும் வகையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு படைப்பாளியையும் குறித்த தெளிவான விவரணையும், அவர்தம் படைப்புகளின் மீது பாய்ச்சப்படும் வெளிச்சமும் மிகவும் இயல்பாக, ...