Posts

கதைகள்

Image
 கடைசியாக ஒரு முறை  அரவிந்தன் காலச்சுவடு பதிப்பகம் 118 பக்கங்கள் 100 ரூபாய்  இலக்கிய இதழ்கள் பலவற்றில் வெளியான அரவிந்தனின் ஏழு கதைகளின் தொகுப்பு நூல் இது.  சுயமதிப்பும், வெட்கமும் சற்றும் இல்லாது அதிகாரப் பீடத்திற்கு மண்டியிட்டு மகிழும் கூட்டத்தினரைப் பற்றிய கதை 'மயான நகரம்'.  ராணியின் கண்ணசைவில் அவளுக்கு மகிழ்வளிக்கும் வகையில் அனைத்தும் நடைபெறுகின்றன. சுய சிந்தனையற்ற அக்கூட்டம் நீடித்து அழவும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் கைகளைத் தட்டவும் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறது.  தொகுப்பின் இரண்டாவது மற்றும் இறுதியில் அமையும் கதைகளை அடுத்தடுத்து வாசித்தேன். ஒரே நபரை வியந்தோதும் இரட்டைக் கதைகள் இவை.  ராமமூர்த்தியைப் போன்ற வழிகாட்டிகள் எல்லோரின் வாழ்விலும் ஏதேனும் ஒரு கட்டத்தில் குறிப்பாக பதின் வயதுகளில் இருக்கவே செய்கிறார்கள்.  தாம் வலியுறுத்திய விழுமியங்களைத் தாமே  உடைத்து விடும் அந்நபர்கள், தன்னை பொய் கூறாதே என்று வலியுறுத்தும் அப்பா, அம்மாவிடம் ஏன் இப்படி பொய்யுரைக்கிறார் என்று வியக்கும் குழந்தையை நினைவுபடுத்துகிறார்கள்.  கடலும், மலையும், வன...

வாழ்க்கை

Image
என்.சங்கரய்யா வாழ்க்கையும் இயக்கமும் என் ராமகிருஷ்ணன் பாரதி புத்தகாலயம்  207 பக்கங்கள் 180 ரூபாய்  தோழர் சங்கரய்யாவின் நம்பவே முடியாத, வியப்பளிக்கும் நீண்ட பொதுவாழ்வை, தியாகங்களை அவரது பன்முக ஆளுமையை எடுத்தியம்பும் நூல் இது.  102வது வயதில் மறைந்த தியாகத் தலைவரை 52 அத்தியாயங்களில் விளக்க முயலும் நூல். தேர்வு எழுதி பட்டம் பெற வேண்டிய நிலையில் 15 நாட்களுக்கு முன்பாக சிறைக்குச் செல்கிறார். 18 மாத சிறை தண்டனையை அனுபவித்துவிட்டு திரும்புகையில் படிப்புக்கு முடிவு ஏற்படுகிறது.  சிறையில் பத்து நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பின்பு 'தாய்' நாவலை வாசித்துக் கொண்டிருக்கும் சங்கரய்யா ஆங்கிலேய அதிகாரிகளுக்கு ஆச்சரியம் அளிக்கிறார்.  பதின் வயதுகளிலேயே மார்க்சிய சித்தாந்தம் தோழரை ஈர்க்கிறது. உலக மக்களின் மேம்பட்ட வாழ்விற்கு மார்க்ஸியமே வழி என்று முடிவு செய்கிறார்.  மிக இளம் வயதிலேயே உயர் பொறுப்புகள் தேடி வருகின்றன. தனது தீவிர சோர்வறியாத செயல்பாடுகளால் வழங்கப்பட்ட பதவிகளுக்கு நியாயம் செய்கிறார் தோழர். 'உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம்'  மேற்கண்ட பாரதியி...

கதைகள்

Image
டால்ஸ்டாய் கதைகள் தமிழில் வல்லிக் கண்ணன் மின்னூல் 138 பக்கங்கள்  டால்ஸ்டாயின் மூன்று கதைகளின் தொகுப்பு இந்நூல். 'இருவர்'  பணம் ஈட்டுவதையே வாழ்வின் குறிக்கோளாக கொண்ட பேராசைக்காரன் வாஸிலி ஆன்ட்ரீவிச் பிரகுணோவ், தனது விசுவாசமான ஊழியன் நிகிட்டாவைக்கூட  சுரண்டுகிறான்.  நிகிட்டா, வாசிலியின் எண்ணங்களை முழுமையாக அறிந்திருக்கிறான். 'மரண பயம் மனிதரை வேட்டையாடிக் கொண்டே இருக்கிறது. தான்- தனக்கு -தன்னுடைய என்ற குறுகிய நினைவுகளோடு வாழ்கிற வரையில்தான் மரணம் மனிதரை பயமுறுத்தும். தன்னை மறந்து பிறருக்கு உதவத் துணிகிறபோது மனிதன் மரண பயத்தை வென்று விடுகிறான். அதுவரை அவனுக்கு கிட்டாத மன அமைதி தானாகவே அவனை வந்து அடைகிறது'.  மேற்கண்ட வரிகள் டால்ஸ்டாய் எழுதியதா அல்லது மொழி பெயர்ப்பாளர் வல்லிக் கண்ணன் எழுதியதா என்று தெரியவில்லை முன்னுரையில் இடம்பெறும் இவ்வரிகள் எத்தனை நிதர்சனமானவை என்பதை உணர முடியும்.   குளிர் காலத்தில், இரவு நேரத்தில்,  நீண்ட பயணம் மேற்கொள்ளும் அவ்விருவரும் இரு துருவங்களில் வசிப்பவர்கள். நிகிட்டா இறந்து விடுவான் என்று நினைக்கும் போது பெரும் திருப்பமாக பனிப்ப...

நாவல்

Image
 கிடங்குத் தெரு செந்தூரம் ஜெகதீஷ் ஜெயரிகி பதிப்பகம் 224 பக்கங்கள் 280 ரூபாய் 90களின் துவக்கத்தில் சென்னை பாரிமுனை பகுதிகளுக்கு தொடர்ச்சியாக சென்று வரும் வாய்ப்புகள் ஏற்பட்டது. அன்றைய நாட்களை நினைவுபடுத்திவிட்ட நாவல் இது.  சென்றமாத காலச்சுவடு இதழில் இந்நாவல் குறித்த குறிப்பு ஒன்றை வாசித்ததன் அடிப்படையில் முன்பதிவு செய்தேன்.  வாசிப்பதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவிட்ட நூல் என்ற போதும், வாசிப்பின் முடிவில் அடைந்த ஏமாற்றத்தைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.  ராஜா என்ற எழுத்தாளனைப் பற்றியே மிக அதிக பக்கங்களுக்கு இடம்பெறும் புனைவு, சுய பச்சாதாபம்  மிகுந்ததாகவும் உருமாறி விடுகிறது.  தன்னையே, தனது செயல்பாடுகளையே எப்போதும் எந்நிலையிலும் நேர்மறையாக கட்டமைப்பது உவப்பானதாக இல்லை. மிதமிஞ்சிய தன்னிரக்கம், தன்னம்பிக்கை இழப்புக்குத்தான் கொண்டு செல்லும்.  நாவலில் ஆங்காங்கே அறியப்பட்ட பெரும் எழுத்தாளர்களின் மேற்கோள்கள் இடம்பெறுவது சிறப்பு.  வணிகத்தில் மார்வாடிகளின் ஈவிரக்கமற்ற, கறார்த்தனமான செயல்களையும் நாவல் பகடியுடன் சொல்கிறது. பணி செய்யும் இட...

கவிதைகள்

Image
அண்டங்காளி ஆசை டிஸ்கவரி புக் பேலஸ் 86 பக்கங்கள்  100 ரூபாய் கவிஞர் ஆசையின் 50 கவிதைகளின் தொகுப்பு இந்நூல். தேய்ந்துபோன அல்லது  தேர்ந்த ஒரு 100 சொற்களைக் கொண்டு இந்நூலுக்கு வாசிப்புப் பதிவு எழுதிவிட முடியுமா என்ன?  ஒவ்வொரு கவிதையும் வார்த்தைகளை சிறகுகளாக்கி அண்டவெளியெங்கும் வாசகனை சுழற்றியடிக்கிறது.  பாரதி கவிதைகளில் இடம்பெறும் காளி மீதான பாடல்களில் சிலவற்றை வாசித்திருக்கிறேன். அவற்றின் நூற்றாண்டுக்குப் பிறகான தொடர்ச்சியாக ஆசையின் இக்கவிதைகளைக் கருதலாம். 'கண்ணைத்  திறந்துகொண்டு காணும் காளியல்ல நீ கண்ணை மூடினால் விழிக்கோளத்துக்கும்  இமையடைப்புக்கும்  இடையே இருள் தாண்டவம்  ஆடுபவள் நீ இருட்காளி' அடுத்தடுத்த வாசிப்புகளினூடே நுட்பங்களை கூர்மையாக விளக்கிச் செல்லும் கவிதைகள் வாசகனை வியப்பில் ஆழ்த்துபவை. பா.வெங்கடேசனின் 'வாரணாசி' நாவலில் இடம்பெறும் 'மறிநிலைப் படிமம்' என்ற அழகிய சொல் ஒரு கவிதையில் காளியை பேரண்டமாக உருவகிக்கப் பயன்படுகிறது.  காளியை அன்னையாக, அண்டமாக, பேயாக கட்டுக்கடங்காத தனது வர்ணிப்புகளால் உருவகித்து சன்னதம் கொண்டு ஆடி கவி பாடுகிறார் ஆ...

வரலாறு

Image
சேரன்மாதேவி  குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்  பழ.அதியமான்  காலச்சுவடு பதிப்பகம்  334 பக்கங்கள்  பாரபட்சம் போன்றதொரு வலிதரும் அனுபவம் வேறு எதுவும் இருக்கவியலாது. உணவில், பந்தியில் மேற்கொள்ளப்படும் பாரபட்சங்கள் ஆறாத வடுக்களாக நீடிக்க வல்லவை. பாமாவின் 'கருக்கு', கே.ஏ.குணசேகரனின் 'வடு' போன்ற புனைவுகள் அத்தகைய வலிகளை பொதுவெளிகளில் உணர்ந்தறியச் செய்துவிடுகின்றன.  புரட்சிகரமான தேசபக்தர் வ.வே.சு ஐயர் சாந்தி நிகேதனம் போன்றதொரு ஆசிரமத்தை தமிழ் மண்ணில் நிறுவிவிடும் ஆர்வத்துடன் மிகுந்த பிரயத்தனத்துடன் பிராமணர், பிராமணரல்லாதோரிடம் இருந்து திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு சேரன்மாதேவியில் ஆசிரமம் நிறுவுகிறார்.  ஆசிரமத்தில் ஒன்றாக அமர்ந்து உண்ண மறுக்கும் இரு சிறுவர்களுக்கு சமையல் அறையில் தனியாக உணவு பரிமாறப்படுகிறது. இளவயதில் குழந்தைகளிடையே பிறப்பு சார்ந்து அமையும் ஏற்றத்தாழ்வுகள் என்ற நஞ்சினை விதைப்பதாக அமையும் இச்செயலை வரதராஜுலு நாயுடு அவர்களும், ஈவேரா பெரியாரும் எதிர்க்கிறார்கள். குருகுலப் போராட்டம் வலுப்பெறுகிறது. சமபந்தி போஜனத்தை உறுதி செய்ய வேண...

கட்டுரைகள்

Image
களப்பிரர் ஆட்சியில் தமிழகம்  மயிலை சீனி வேங்கடசாமி மின்நூல்  210 பக்கங்கள்  களப்பிரர்கள் ஆட்சியை தமிழகத்தின் இருண்ட காலம் என்றும், வரலாற்று ஆவணங்கள் ஏதுமற்ற காலகட்டம் என்றும் இளம் வயதில் பாடநூல்களின் வாயிலாக அறிந்து வைத்திருந்த தேய்ந்துபோன தட்டையான கருத்துக்களை மாற்றி அமைத்துவிட்ட நூல் இது.  தனது வாழ்வில் உடல்வாதையும், மன அழுத்தமும் மிகுந்த நாட்களில் இந்நூலை படைத்ததாகக் கூறும் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள், பின்னுரையில் தரும் குறிப்புதவி  நூல்களின் பெரும் பட்டியல் மலைப்பைத் தருகிறது.  'வடுகர்' எனப்படும் கன்னட மொழியை தாய்மொழியாகக் கொண்ட களப்பிரர்கள் வைணவ சமயத்தைச் சார்ந்தவர்களாயும், சேர, சோழ ,பாண்டியரை வென்று மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆட்சி புரிந்தும் இருக்கிறார்கள்.  இவர்களின் காலம் கிபி 250 முதல் கிபி 575 வரை நீடித்திருக்கும் என்று சான்றுகளுடன் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.  'அச்சுதன்' என்ற பொதுப் பெயரால் அழைக்கப்பட்ட அரசர்களும், அவர்தம் ஆட்சியில் பௌத்த, சமண மதங்கள் சிறந்தும் விளங்கியமை நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.  இலங்கைய...