தாலிபன்

தாலிபன் பா ராகவன் மின்நூல் 325 பக்கங்கள் சுதந்திரத்தின், ஜனநாயகத்தின் மேன்மைகளை அவற்றைப் பெற முடியாமல் தவற விட்டுவிட்ட நாடுகளே நமக்கு உணர்த்துவதாக அமைந்துவிடுகின்றன. அத்துமீறல்களும், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் ஆப்கனில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதை அறிகையில் மனம் மிகுந்த துயரம் அடைகிறது. பா ராகவனின் 9/11, 'ஓப்பன் டிக்கெட்' உள்ளிட்ட நூல்களை பல ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தது உண்டு. தாலிபன்கள் குறித்த தகவல்களை மிக அழகாக செய்நேர்த்தியுடன் கோர்த்து, அலுப்பு ஏற்படுத்தாத மொழிநடையில் அளித்திருக்கிறார். தீவிர இலக்கிய வாசிப்புகளுக்கு இடையில் முன்பெல்லாம் 'சுஜாதா', 'மதன்' ஆகியோரின் நூல்களை வாசிப்பது போன்று இந்நாட்களில் பாராவின் நூல்களின் வாசிப்புகள் அமைந்துவிடுகின்றன. மத அடிப்படைவாதம் தலைதூக்குகையில், மக்கள் அடைய நேரிடும் துன்பங்களுக்கு அளவே இல்லாமல் போய்விடுகிறது. கல்வி மறுக்கப்படும் சமூகம், வளர்ச்சி பெறவும் வழியின்றி, மூளைச்சலவை செய்யப்பட்டு, மிக சுலபமாக பலிகடாக்கள் ஆக்கப்பட்டு விடுகின்றனர். தீவிரவாதம் எத்தரப்புக்கும் நன்மை அளிக்கப் போ...