வரலாறு
களப்பிரர் ஆட்சியில் தமிழகம் மயிலை சீனி வேங்கடசாமி மின்நூல் 210 பக்கங்கள் களப்பிரர்கள் ஆட்சியை தமிழகத்தின் இருண்ட காலம் என்றும், வரலாற்று ஆவணங்கள் ஏதுமற்ற காலகட்டம் என்றும் இளம் வயதில் பாடநூல்களின் வாயிலாக அறிந்து வைத்திருந்த தேய்ந்துபோன தட்டையான கருத்துக்களை மாற்றி அமைத்துவிட்ட நூல் இது. தனது வாழ்வில் உடல்வாதையும், மன அழுத்தமும் மிகுந்த நாட்களில் இந்நூலை படைத்ததாகக் கூறும் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள், பின்னுரையில் தரும் குறிப்புதவி நூல்களின் பெரும் பட்டியல் மலைப்பைத் தருகிறது. 'வடுகர்' எனப்படும் கன்னட மொழியை தாய்மொழியாகக் கொண்ட களப்பிரர்கள் வைணவ சமயத்தைச் சார்ந்தவர்களாயும், சேர, சோழ ,பாண்டியரை வென்று மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆட்சி புரிந்தும் இருக்கிறார்கள். இவர்களின் காலம் கிபி 250 முதல் கிபி 575 வரை நீடித்திருக்கும் என்று சான்றுகளுடன் குறிப்பிடுகிறார் ஆசிரியர். 'அச்சுதன்' என்ற பொதுப் பெயரால் அழைக்கப்பட்ட அரசர்களும், அவர்தம் ஆட்சியில் பௌத்த, சமண மதங்கள் சிறந்தும் விளங்கியமை நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இ...