இரவு
இரவு ஜெயமோகன் மின்நூல் 319 பக்கங்கள் பணி நிமித்தமாக தமிழக ஆடிட்டர் சரவணன், எர்ணாகுளம் செல்கிறார். அண்டை வீட்டின் இரவு நடவடிக்கைகள் அவரை வியப்புக்குள்ளாக்குகிறது. பகலில் ஆளரவமற்று விளங்கும் அவ்வீடு இரவில் விழித்துக் கொள்கிறது. அவ்வீட்டில் அட்மிரல் மேனனும், அவரது மனைவி கமலாவும் வசிக்கின்றனர். இரவில் மட்டும் நடமாடும், செயல்படும் குழு ஒன்று அவரது ஒருங்கிணைப்பில் இயங்குகிறது. இரவுகளுக்கு மிகவும் பரிச்சயம் ஆகிவிடும் அவர்தம் கண்கள் பகலைக் காண கூசுகிறது. தயக்கத்துடன் குழுவில் இணையும் சரவணன் நீலிமாவை சந்திக்கிறான். திருமணம் நடைபெற இருந்த கடைசித் தருணத்தில் தனது இணையை இழந்த நீலிமா, சரவணனால் கவரப்படுகிறாள். இரவு நேரங்களில் அவர்கள் இருவரின் கார் பயணங்களும், விவாதங்களும் கூர்மையாக புனையப்பட்டுள்ளன. முறையற்ற பழக்கம் இந்த இரவு நேர வாழ்க்கை என்று தன் வீட்டுப் பணிப்பெண்ணால் எச்சரிக்கப்படும் சரவணன், சுதாரித்துக் கொண்டு தனது இயல்பான பணிகளுக்குத் திரும்புகிறான். சிறு இடைவேளைக்குப் பின் இரவு வாழ்வே அவனை மீண்டும் வசீகரிக்கிறது. முறையற்ற பாலியல் தொடர்பினால் அட்ம...