Posts

வரலாறு

Image
இந்தியாவின் சுருக்கமான வரலாறு ஜான் ஜுபர்ஸிக்கி தமிழில் அரவிந்தன் காலச்சுவடு பதிப்பகம் 296 பக்கங்கள் விலை ரூபாய் 190  துணைக்கண்டத்தின் 5000 ஆண்டு கால நெடிய வரலாற்றை 300 பக்கங்களுக்குள் மிகவும் சுருக்கமாக தொகுத்து அளித்திருக்கிறார் ஜான் ஜூபர்ஸிக்கி. வரலாற்றை வாசித்தல் மிகவும் மகிழ்வு தரக்கூடியது. மேம்பட்ட எழுத்தில் இந்திய வரலாற்றை வாசித்தது பெருமகிழ்வு அளித்தது.  200 ஆண்டுகால  காலணிய ஆட்சி குறித்து பள்ளி பாடப் புத்தகங்களில் வாசித்தது என்றபோதும், ஆர்வமிகுதியில் தேர்வு நோக்கிலன்றி வரலாற்று நூல்களை வைத்திருந்தபோது நண்பர்களின் ஏளனத்திற்கு ஆளாகியது நினைவுக்கு வருகிறது.  இந்நூல் ஐயாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்று இந்திய வரலாற்றை ஜோடனையின்றி விளக்கிச் செல்கிறது. ஈர மண்ணில் எழுதி வைத்த குறிப்புகள் வரலாற்று ஆவணங்களாக மாறியது வியப்பை ஏற்படுத்திவிடுகின்றன. பாரபட்சமற்ற சமூகமாக, நகர அமைப்பில் வாழ்ந்த மக்களைக் குறித்து அறிகையில் வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்படுகின்றன.  ஆப்பிரிக்காவுக்கு அடுத்து துணைக் கண்டமே மனிதர்கள் நெடு நாட்களாக வசித்த பகுதி என்பதை அறிகையில் நமது பா...

நாவல்

Image
 மலை மேல் நெருப்பு  அனிதா தேசாய்  தமிழில் அசோகமித்திரன் சாகித்ய அகாடமி வெளியீடு  154 பக்கங்கள்  170 ரூபாய்  மனிதரின் ஆளுமைகள் சிறு குழுக்களில் பெரிதாக வெளிப்பட்டு விடுகின்றன. பலவீன மனதுடையவர்களின் தற்காப்பு நடத்தைகள்கூட அங்கு எடுபடுவதில்லை.  தனிமை, மனித வாழ்வின் மற்றொரு பரிமாணம். அன்பையும், அங்கீகாரத்தையும் தேடியலையும் மனம்தான் தவிர்க்க முடியாத வண்ணம் தனிமையையும் நாடுகிறது. இது ஒரு அழகிய நகை முரண்.  நந்தா கவுல் கரிக்னானோவில் தனிமையில் வசிக்கிறார். பழைய நினைவுகளும், ஏக்கங்களும் சிந்தனையில் ஊசலாடுகின்றன.  வெறும் நான்கு கதாபாத்திரங்களுடன் 200 பக்கங்களுக்கும் குறைவாக எழுதப்பட்டுள்ள இந்நாவல், கட்டமைப்பு நேர்த்தியுடன் தனித்துவமான வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்திவிடுகிறது. 'நான்தான் என் கடமைகளை நிறைவு செய்து விட்டேனே, என்னை ஏன் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்கிறீர்கள்?' என்ற வரி, வயது முதிர்ந்தவளின் ஆரம்பகால கடின உழைப்புகளையும், முதிர்ந்த காலத்து அமைதி தேடலையும் வெளிப்படுத்துகிறது.  தனது கொள்ளுப்பேத்தி ராக்காவின் வருகை நந்தா கவுலுக்கு எவ்வித பெரிய...

நாவல்

Image
 துலக்கம்  ஒரு பிழையின் மறு விசாரணை யெஸ் பாலபாரதி மயில் புக்ஸ் 120 பக்கங்கள் 120 ரூபாய்  தமிழ்ச் சமூகத்தில் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் நடமாடுகின்றனர். இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றவர்களிடம் அன்பு நிறைந்திருக்கிறது.  ஆணோ, பெண்ணோ சிறப்புக் குழந்தைகளை பெற்றவர்களை சமூகம் பரிதாபமாகத்தான் பார்க்கிறது. அப்பார்வைகளில் ஏளனமும் நிறைந்துள்ளதை மறுக்க இயலாது.  இப்படியான புரிதலற்ற மனிதர்கள் நிறைந்துள்ள சமூகத்தில், ஆட்டிச நிலையாளன் ஒருவன் தொலைந்து போகையில், அவனும் அவனைப் பெற்றவர்களும் அனுபவிக்க நேர்ந்திடும் கொடுமைகளை விறுவிறுப்பாக, மிகையின்றி சொல்கிறது இந்நாவல்.  தம்பதியினரிடம் துவக்கத்தில் தோன்றும் 'நமக்கு மட்டும் ஏன் இப்படியொரு நிலை?' 'யார் இதற்குக் காரணம்?' போன்ற குழப்பங்களுக்கு முடிவாக நிலையை ஏற்றுக் கொள்ளுதல், என்பது தீர்வாக அமைகிறது.  பொறுமையும், விடாமுயற்சியும், சகிப்புத்தன்மையும் சிறப்பு குழந்தைகளின் பெற்றோருக்கு மிகுதியாகத் தேவைப்படுவது போன்று, மனித நேயமும், கருணையும் பொதுச் சமூகத்திற்கு தேவைப்படுகிறது.  சில ஆண்டுகளுக்கு முன்...

கட்டுரைகள்

Image
வாழ்க்கை கட்டுரைகள் லியோ டால்ஸ்டாய் தமிழில் ப.ராமஸ்வாமி மின்னூல் 136 பக்கங்கள் வாழ்க்கையின் புதிர்களை, எதிர்பாராமைகளை, மனித மனங்களை, வாழ்வை, மரணத்தை, மரணத்திற்குப் பிந்தைய வாழ்வினை தத்துவார்த்தமாக விவரிக்கும் நூல் இது.  எத்தனை படித்தவராய் இருப்பினும், பண்பட்டவராக, அனுபவங்களில் மேம்பட்ட நிலையை அடைந்தவராய் இருப்பினும் வாழ்வில் எதிர்ப்படும் வினோதங்களில் இருந்து தப்பியவர் எவரும் இருக்க முடியாது.  தனது மகளின் மரணத்தின்போது 'இத்தனை படித்தும் எழுதிக் குவித்தும் வாழ்க்கையின் தாத்பரியம் எனக்கு விளங்கவே இல்லையே' என்று டால்ஸ்டாய்  கதறியதாக எங்கோ வாசித்த நினைவு.  தனக்கென மட்டுமே வாழாதவனுக்கே அச்சமற்ற வாழ்வு சாத்தியப்படுகிறது. அத்தகைய வாழ்வு மீதான அணுகலும், விலகலுமே பெரும்பாலான மனிதருக்கு சாத்தியப்படுகிறது. 'ஒவ்வொரு உயிருக்கும் தன் வாழ்வே பெரிது, தன் நலனே முக்கியம் என்ற உணர்ச்சி இருக்கிறது. அப்படியிருந்தும் மனிதன் எல்லா உயிர்களும் தன் சுகத்திற்காகவே அமைந்தவை என்று கருதுகிறான்'.  ஒரு இடத்தில் நீண்ட நாட்கள் வசித்தபின் அல்லது பணியாற்றியபின் எதேச்சையாக அவ்விடத்தை நீங்கிச் சென்றப...

கதைகள்

Image
 கடைசியாக ஒரு முறை  அரவிந்தன் காலச்சுவடு பதிப்பகம் 118 பக்கங்கள் 100 ரூபாய்  இலக்கிய இதழ்கள் பலவற்றில் வெளியான அரவிந்தனின் ஏழு கதைகளின் தொகுப்பு நூல் இது.  சுயமதிப்பும், வெட்கமும் சற்றும் இல்லாது அதிகாரப் பீடத்திற்கு மண்டியிட்டு மகிழும் கூட்டத்தினரைப் பற்றிய கதை 'மயான நகரம்'.  ராணியின் கண்ணசைவில் அவளுக்கு மகிழ்வளிக்கும் வகையில் அனைத்தும் நடைபெறுகின்றன. சுய சிந்தனையற்ற அக்கூட்டம் நீடித்து அழவும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் கைகளைத் தட்டவும் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறது.  தொகுப்பின் இரண்டாவது மற்றும் இறுதியில் அமையும் கதைகளை அடுத்தடுத்து வாசித்தேன். ஒரே நபரை வியந்தோதும் இரட்டைக் கதைகள் இவை.  ராமமூர்த்தியைப் போன்ற வழிகாட்டிகள் எல்லோரின் வாழ்விலும் ஏதேனும் ஒரு கட்டத்தில் குறிப்பாக பதின் வயதுகளில் இருக்கவே செய்கிறார்கள்.  தாம் வலியுறுத்திய விழுமியங்களைத் தாமே  உடைத்து விடும் அந்நபர்கள், தன்னை பொய் கூறாதே என்று வலியுறுத்தும் அப்பா, அம்மாவிடம் ஏன் இப்படி பொய்யுரைக்கிறார் என்று வியக்கும் குழந்தையை நினைவுபடுத்துகிறார்கள்.  கடலும், மலையும், வன...

வாழ்க்கை

Image
என்.சங்கரய்யா வாழ்க்கையும் இயக்கமும் என் ராமகிருஷ்ணன் பாரதி புத்தகாலயம்  207 பக்கங்கள் 180 ரூபாய்  தோழர் சங்கரய்யாவின் நம்பவே முடியாத, வியப்பளிக்கும் நீண்ட பொதுவாழ்வை, தியாகங்களை அவரது பன்முக ஆளுமையை எடுத்தியம்பும் நூல் இது.  102வது வயதில் மறைந்த தியாகத் தலைவரை 52 அத்தியாயங்களில் விளக்க முயலும் நூல். தேர்வு எழுதி பட்டம் பெற வேண்டிய நிலையில் 15 நாட்களுக்கு முன்பாக சிறைக்குச் செல்கிறார். 18 மாத சிறை தண்டனையை அனுபவித்துவிட்டு திரும்புகையில் படிப்புக்கு முடிவு ஏற்படுகிறது.  சிறையில் பத்து நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பின்பு 'தாய்' நாவலை வாசித்துக் கொண்டிருக்கும் சங்கரய்யா ஆங்கிலேய அதிகாரிகளுக்கு ஆச்சரியம் அளிக்கிறார்.  பதின் வயதுகளிலேயே மார்க்சிய சித்தாந்தம் தோழரை ஈர்க்கிறது. உலக மக்களின் மேம்பட்ட வாழ்விற்கு மார்க்ஸியமே வழி என்று முடிவு செய்கிறார்.  மிக இளம் வயதிலேயே உயர் பொறுப்புகள் தேடி வருகின்றன. தனது தீவிர சோர்வறியாத செயல்பாடுகளால் வழங்கப்பட்ட பதவிகளுக்கு நியாயம் செய்கிறார் தோழர். 'உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம்'  மேற்கண்ட பாரதியி...

கதைகள்

Image
டால்ஸ்டாய் கதைகள் தமிழில் வல்லிக் கண்ணன் மின்னூல் 138 பக்கங்கள்  டால்ஸ்டாயின் மூன்று கதைகளின் தொகுப்பு இந்நூல். 'இருவர்'  பணம் ஈட்டுவதையே வாழ்வின் குறிக்கோளாக கொண்ட பேராசைக்காரன் வாஸிலி ஆன்ட்ரீவிச் பிரகுணோவ், தனது விசுவாசமான ஊழியன் நிகிட்டாவைக்கூட  சுரண்டுகிறான்.  நிகிட்டா, வாசிலியின் எண்ணங்களை முழுமையாக அறிந்திருக்கிறான். 'மரண பயம் மனிதரை வேட்டையாடிக் கொண்டே இருக்கிறது. தான்- தனக்கு -தன்னுடைய என்ற குறுகிய நினைவுகளோடு வாழ்கிற வரையில்தான் மரணம் மனிதரை பயமுறுத்தும். தன்னை மறந்து பிறருக்கு உதவத் துணிகிறபோது மனிதன் மரண பயத்தை வென்று விடுகிறான். அதுவரை அவனுக்கு கிட்டாத மன அமைதி தானாகவே அவனை வந்து அடைகிறது'.  மேற்கண்ட வரிகள் டால்ஸ்டாய் எழுதியதா அல்லது மொழி பெயர்ப்பாளர் வல்லிக் கண்ணன் எழுதியதா என்று தெரியவில்லை முன்னுரையில் இடம்பெறும் இவ்வரிகள் எத்தனை நிதர்சனமானவை என்பதை உணர முடியும்.   குளிர் காலத்தில், இரவு நேரத்தில்,  நீண்ட பயணம் மேற்கொள்ளும் அவ்விருவரும் இரு துருவங்களில் வசிப்பவர்கள். நிகிட்டா இறந்து விடுவான் என்று நினைக்கும் போது பெரும் திருப்பமாக பனிப்ப...