நேசம்

நேசம் லா.ச.ராமாமிருதம் மின்நூல் 179 பக்கங்கள் லா.ச.ராவின் 11 சிறுகதைகளின் தொகுப்பு இம்மின்நூல். கண்கட்டு, காதில் பஞ்சு சகிதம் உப்பில்லா பட்டினியுடன் மௌன விரதம் அனுசரிக்கிறார் பணி ஓய்வு பெற இருப்பவர். நவராத்திரி நாட்களில் நடைபெறும் இவ்விரதம் அவரது புறச்சூழல்களில் ஆச்சரியங்களையும், நகைப்புகளையும் கொண்டு வருவதுடன், பெரும் அதிர்வுகளை அவருக்கு ஏற்படுத்தி விரதம் முடிவுக்கு வருகிறது. சிறு பிணக்கு ஒன்றின் பொருட்டு வீட்டை நீங்கிச் சென்றவர், மீளவும் அவ்விடம் திரும்புகிறார். மஞ்சள், குங்குமத்தை தவிர்த்துவிட மறுக்கும் அம்மாவிடம் பெரும் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. விருந்தாளியாக அறியப்பட்ட பெரியவர், இரவு உணவு கொள்ளவும் மறுக்கிறார். கதவை திறந்து வைக்க நிர்பந்திப்பவர் விடியும்முன் அவ்விடம் நீங்கிச் செல்கிறார். ஜன்னலோரத்தில் சாக்லேட் ஒன்றுடன், தோடுகள் இரண்டும் தமது இருப்பின் மூலம் வந்திருந்தது யார் என்பதை விளக்கி விடுகின்றன. குழந்தைகளின் பார்வையில் பெரியவர்களின் ஊடலை அழகாக உணர்த்துகிறது 'அப்பாவின் மீசை' கதை. தொகுப்பின் நீண்ட கதை 'பாலா'. இந்நூலின...