Posts

கவிதைகள்

Image
எண்ணும் எழுத்தும்  பிருந்தா சாரதி டிஸ்கவரி புக் பேலஸ் . 88 பக்கங்கள் எண்களை மையப்படுத்தி குறிப்பால் உணர்த்திவிடும் கவிதைகள் அமைந்திருக்கும் தொகுப்பு இந்நூல். 'இரட்டை மாட்டு வண்டி' கவிதையில் இடம்பெறும் கீழ்க்கண்ட வரிகள் அளித்திடும் தரிசனம் நேசத்தை உணர்த்திச் செல்கிறது. 'ஈ மொய்க்கும் என் கழுத்துப் புண் கண்டு நாவினால் நக்கி அன்பு செய்தாயே அது ஒன்று போதும் காயடிக்கப்பட்ட இவ்வாழ்வுக்கு'  நூலில் இடம்பெற்றிருக்கும் ஆர்.எம் பழனியப்பனின் ஓவியங்கள் ஆழ்ந்த உற்று நோக்கலுக்கு இட்டுச் செல்லும் தன்மையை கொண்டுள்ளவை.  புரிதலின் இன்பம் கிடைக்கும் சாத்தியங்கள் வாசகனுக்கு கிடைக்க நுட்பமான அவதானிப்பு அவசியமாகிறது.  கற்கும் பாடங்களின் மீதான ஈர்ப்பும், அடைவுகளும் வெகு இயல்பாக அமைந்து விடுகின்றன. ஒருவருக்கு பெரும் அச்சுறுத்தலை மிரட்சியை தரும் பாடம், மற்றவருக்கு விளங்கிக் கொள்ள இயலாத ஈர்ப்பைத் தந்து விடுகிறது. 'உடைக்குள் நடுங்கியது உடல்'  கணிதத் தேர்வுக்கு முந்தைய நாளின் கனவாக புனையப்பட்டிருக்கும் கவிதையில் இடம் பெற்றுள்ள வரி மேற்கண்டது. 'எண்ணும் மனிதன்' என்ற நூல் குறித்த அறிமுக...

நாவல்

Image
 காயாம்பூ லாவண்யா சுந்தரராஜன் காலச்சுவடு பதிப்பகம்  383 பக்கங்கள்  தொடர்ச்சியாக விரைந்து வாசித்து எளிதில் கடந்து சென்றுவிட இயலாத துயரார்ந்த எழுத்துக்களை கொண்டிருக்கும் பக்கங்கள். அளவுகடந்த தெய்வ நம்பிக்கைகளை எழுதி செல்கையிலும், மூடநம்பிக்கைகளை, அதன் வணிக யுக்திகளை கண்டிக்கத் தவறவில்லை லாவண்யா.  வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களில் சமூகம், தனி மனிதனுக்கு கருணையின்றி அளித்திடும் அழுத்தங்களும், அதைத் தொடர்ந்த வாதைகளும் பெரும் துயரளிப்பவை.  எனது மாணவி ஒருத்தி, பதின்பருவத்தின் இறுதியிலேயே திருமணம் செய்விக்கப்பட்டு, ஓராண்டு முடிவதற்கு முன்பே பேறு காலத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.  சுகப்பிரசவமே நடைபெறும் என்று எல்லோராலும் கணிக்கப்பட்ட நிலையில் அவளது குழந்தை இறந்தே பிறந்தது என்றும், அவள் உயிர் மீண்டதே பெரும் அதிசயம் என்றும் கேள்விப்பட்டு வருந்தினோம்.  பிரசவ அறைக்குள் நுழைந்த ஆண் மருத்துவரைக் கண்டு அதிர்ந்துபோன அவள் கோபமான சொற்களை வீச, பின்பு ஏற்பட்ட களேபரத்தில் இவ்வளவும் நடந்து முடிந்தது.  இயல்பாக கிடைத்துவிட வேண்டிய பேறுக்காக நந்தினி ஆண்...

கட்டுரை

 நின்றசொல்  கவிதைகள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு விக்ரமாதித்யன்  மின்நூல் 177 பக்கங்கள்  கவிதைகளை நுட்பமாக வாசித்து உணர, தேர்ந்த வாசகரும், பெரும் கவிஞருமான விக்ரமாதித்யன் அளிக்கும் வெளிச்சமே இக்கட்டுரைத் தொகுப்பு.  படைப்புகள் குறித்த முன்முடிவுகள் ஏற்படுவது போன்று தோன்றினாலும், வாசகனுக்கு இவ்வெளிச்சம் அவசியமானது என்றே தோன்றுகிறது. "வேலை செய்து முரடேரிய உங்கள் விரல்களில் இதம்தரும் மென்மையை நான் அனுபவித்த வேளைகளை எண்ணி ஏங்குகிறேன் இன்று"  கண்டிப்பான தனது தாய் குறித்த மகளின் கூற்று மேற்கண்டது.  வலி தரும் வாழ்வை மேற்கொள்ளவும், கடக்கவும் இலக்கியம் எப்போதும் பெருந்துணையாக வந்து கொண்டே இருக்கிறது வாசகனுக்கு.  இலக்கிய வகைமைகளில் மிகக் குறைவான சொற்களைக் கொண்டு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திவிடும் வல்லமை கவிதைகளுக்கே வாய்க்கப் பெற்றிருக்கிறது.  ராஜ சுந்தரராஜனின் 'அறிவுஜீவி' கவிதை கீழ்க்கண்டது. "இவர்களில் ஒருவனாய் நானும் இருந்தேன் சிறுவயதில், காலம் இடைவந்து எதை எதையோ கற்றுத்தந்தது. ஆள்மாறிப் போனேன் போலும். இன்று தெருவில் ஒரு முகமும் என்னைத் தெரிந்ததாய் இல்ல...

கவிதை

Image
 'ஆண்கள் இல்லாத வீடு' கவிதைத் தொகுப்பு இமையாள் தேநீர் பதிப்பகம்  83 பக்கங்கள் புனைவு வகைமைகளில் சிறுகதை, புதினம் அளவுக்கு கவிதைகளை அதிக அளவில் வாசித்ததில்லை. வாசித்துவிட்ட சொற்ப எண்ணிக்கையிலான கவிதைத் தொகுப்பு நூல்கள் வசீகரிக்கத் தவறியதுமில்லை.  இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை அவசரமின்றி மிகவும் கவனமுடன் வாசித்து மகிழ்ந்தேன். காட்சிப் படிமங்களை உருவாக்கிடத் தவறவில்லை இக்கவிதைகள்.  பேரிடர் காலத்தின் நோயுற்ற தனிமையை நினைவுபடுத்தியது 'நோய்மை', வாழ்வின் தீராத ஏக்கங்களை, ஏமாற்றங்களை 'சுமைதூக்கி' கோடிட்டுச் சென்றது. 'போர்வைகள் விற்பவன்' பணமதிப்பிழப்பு காலத்தை உணர்த்தினான். 'ஒரு மேகத்துணுக்கில் சிறைப்பட்டிருக்கும்  நீர் துளிக்குள் ஒளிந்திருக்கின்றன, ஒரு மழைக்கால இருளும், சிறிது மண் வாசமும், ஒரு வானவில்லும்'. 'மறைபொருள்' என்ற தலைப்பிலான மேற்கண்ட கவிதை மிகவும் வசீகரித்தது.  நூல் வெளியீட்டு நிகழ்வில் கவிஞர் சுகுமாரன் வாசித்த 'மனைவியின் காதல்' கவிதை இத்தொகுப்பின் சிறப்புகளுள் மற்றுமொன்று.

கிரிக்கெட்

Image
ஆடுகளம்  அரசியல் அழகியல் ஆன்மீகம் தினேஷ் அகிரா வாசகசாலை பதிப்பகம்  156 பக்கங்கள்  முகநூலில் தொடர்ச்சியாக தினேஷ் அகிராவின் கிரிக்கெட் குறித்த பதிவுகளை வாசிப்பது வழக்கம்.  ஆழ்ந்த சொற்களைக் கொண்டு தொழில்நுட்ப நேர்த்தியுடன் அவர் விளக்கிடும் பாணி கிரிக்கெட்டை நேசிக்கும் வாசிப்பு பழக்கம் உடைய நபர்களுக்கு பெரிதும் மகிழ்வு அளிக்கவல்லது.  டான் பிராட்மேன் முதல் ஜஸ்பிரித் பும்ரா வரை ஒவ்வொருவரின் ஆளுமையையும் அவர் விவரிக்கும் நேர்த்தியின் அழகியல் அவருக்கே உரியது.  பொதுவாக இலக்கிய ஈடுபாடு உடைய நபர்களில் பெரும்பாலானோர் கிரிக்கெட் குறித்து ஈர்ப்பு அற்றவர்களாகவே இருப்பார்கள் என்றே நினைத்திருந்தேன்.  2010களின் துவக்க ஆண்டுகளில் ஆர்.அபிலாஷின் கிரிக்கெட் குறித்த கட்டுரைகளை உயிர்மை இதழ்களில் வாசித்தபோது பெரிதும் வியந்தேன்.  அபிலாஷிற்குப் பின் கிரிக்கெட் குறித்த கட்டுரைகளில் தினேஷ் அகிராவின் பங்களிப்பு தொடர்ச்சியாக மெருகேறிக் கொண்டே வருகிறது.  கிரிக்கெட் விளையாட்டு மீதான அதீத ஆர்வம் அதுகுறித்த உட்கூறுகளை நுட்பமாக அறிந்து தெளிய ஒருவருக்கு உதவலாம். வரலாற்று குறிப்பு...

நாவல்

Image
 நித்ய கன்னி  எம் வி வெங்கட்ராம் காலச்சுவடு பதிப்பகம்  182 பக்கங்கள்  விஸ்வாமித்திரருக்கு குருதட்சிணை அளித்தே தீருவேன் என்று அடம் பிடிக்கிறார் சீடர் காலவ முனிவர்.  அமைதியாக மறுத்துக் கொண்டே இருக்கும் அவர் ஒரு கணத்தில் கோபமுற்று (வழக்கம்போல்) 800 புரவிகள் - உடல் முழுவதும் வெண்ணிறமாகவும், ஒரு காது மட்டும் கருப்பு நிறமுடனும் - அளிக்குமாறு உத்தரவிடுகிறார்.  அதிர்ச்சி அடையும் காலவர், யயாதி மன்னரிடம் உதவி கோருகிறார். தனது தெய்வீக வரம்பெற்ற மகள் மாதவியை காணிக்கையாக அளிக்கிறார் அவர்.  ஒரு குழந்தை பெற்றவுடன் மீண்டும் கன்னித் தன்மையை அடைந்துவிடும் வரம்பெற்றவள் மாதவி. அவ்வரமே அவளுக்கு சாபமாய் அமைந்துவிடுகிறது.  மனதார காலவரை வரிக்கும் அவள், நடைபெறவிருக்கும் கேலிக்கூத்துகளுக்கு ஒப்புக்கொள்கிறாள்.  விசுவாமித்திரரின் யோசனைப்படி (!) மூன்று மன்னர்களை ஒருவர்பின் ஒருவராக திருமணம் செய்து, ஒவ்வொருவரிடமும் தலா 200 புரவிகளை பெறுகின்றனர்.  மீதமுள்ள 200 புரவிகளுக்காக விசுவாமித்திரரே மாதவியை மணந்து கொள்கிறார். குழந்தை பிறப்பிற்குப் பின் வழமைபோல் கன்னித்தன்மையை மீ...

சின்னஞ்சிறு பழக்கங்கள்

Image
 சின்னஞ்சிறு பழக்கங்கள் ஜேம்ஸ் கிளியர் நாகலட்சுமி சண்முகம் மின்நூல்  378 பக்கங்கள்  மனதிற்குப் பிடித்த மற்றும் பயன்தரும் பழக்கங்களை வளர்த்துக் கொள்ளவும், நம்மையறியாமல் நம்மிடம் ஒன்றிவிட்ட விரும்பத்தகாத பழக்கங்களை விலக்கி விடவும் பயனுள்ள குறிப்புகளை தந்திடும் நூல் இது.  எளிய குறிப்புகளாகவே இருப்பினும் ஒருங்கிணைந்த செயல்பாட்டு வடிவம் கொள்கையில் ஆச்சரியமளிக்கும் மாற்றங்களை வாழ்வில் ஏற்படுத்திவிடக் கூடிய தகவல்கள் இவை.  அமேசானில் பொருட்களை வாங்குகையில் தொடர்புடைய பொருட்கள் என்ற வகையில் ஒரு துணைப்பட்டியல் வெளிவரும். நமது பட்ஜெட்டை பதம் பார்க்கவல்ல இவ்வணிக உத்திக்கு  'டிடெராட் விளைவு' என்று பெயரிட்டிருக்கின்றனர்.  எல்இடி டிவி வாங்குகையில் அதன் ஒலியமைப்பை மிகவும் குறைவாக அமைத்துவிட்டு அதற்கு துணையாக ஸ்பீக்கர்கள் வாங்கிட வைத்திடும் தந்திரம் இதற்கு உதாரணம்.  தினமும் செய்கின்ற தொடர்ச்சியானதொரு பழக்கத்துடன், ஏற்படுத்திக்கொள்ள விரும்பும் புதியதொரு செயலினை ஏற்றிக்கொண்டு அதன்மூலம் செயல்படும் முறையை இத்துடன் ஒப்பிடுகிறார் ஜேம்ஸ் கிளியர். 'பழக்கங்களை ஒன்றின் மேல் ...