Posts

நாவல்

Image
பாரபாஸ் (அன்புவழி) பேர் லாகர்க்விஸ்ட் க.நா.சு மின்நூல் 190 பக்கங்கள்  மரண தண்டனை நிறைவேற்றலின் இறுதித் தருணத்தில் தப்பிவிடும் பாரபாஸ், இறையுணர்வு அற்றவனாக இருக்கிறான்.  இறைதூதரின் வாதை மிகுந்த மரணம் அவனை பாதிக்கவில்லை.  அவரது தாயின் துயர்மிகு கண்ணீரை அருகிலிருந்து காண்கிறான். இறை தூதரின் வழிநடப்பவர்களால் அடையாளம் காணப்பட்டு விரட்டப்படுகிறான்.  மரண தண்டனை நிறைவேற்றும்போது பூமி இருட்டி விடுவதும், சூழ்ந்திருக்கும் மக்களின் கையறு ஓலமும் அவனை பாதிக்கின்றன.  சுரங்கத்தில் தனது இணை அடிமையின் எண்ண ஓட்டங்களை மதிப்புடன் செவிமடுக்கவும், கழுத்துச் சங்கிலியில் இறை அடையாளத்தை இட்டுக் கொள்ளவும் சம்மதிக்கிறான்.  விசாரணையின்போது இருவரின் வாதங்களும் முரண்படுகையில், இணைஅடிமை சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறக்கிறான்.  கொள்ளையனாக, தந்தையைக் கொன்றவனாக அடையாளப்படுத்தப்படும் பாரபாஸ், தனது உள்ளுணர்வுக்கு புறம்பாக நடந்து கொள்வது இல்லை.  இணைஅடிமை தனது மரண தண்டனையைக் காட்டிலும், பாரபாசின் மறுமொழிகளினாலேயே (விசாரணையின்போது) பெரிதும் வருந்துகிறான்.  அடிமைவோட்டிகளின் மனிதாப...

நாவல்

Image
நட்சத்திரவாசிகள் கார்த்திக் பாலசுப்பிரமணியன் காலச்சுவடு பதிப்பகம் 262 பக்கங்கள்  பத்து வருடங்களுக்கு முன்னர் இரா.முருகனின் 'மூன்று விரல்' நாவல் நூலகத்தில் இருந்து பெற்றுக் கொண்டு வந்து வாசித்தேன். ஐடி துறையினரை மையப்படுத்தி எழுதப்பட்ட அந்நூலை வாசித்து முடித்தபோது அத்துறை சார்ந்த புரிதல் ஓரளவுக்கு ஏற்பட்டது.  அந்நாவல் ஒரேயொரு பணியாளரின் வாழ்வையும், பணிகளையும் பெரும்பாலும் மையப்படுத்தி எழுதப்பட்டிருந்தது. கார்த்திக் பாலசுப்பிரமணியனின் நட்சத்திரவாசிகளின் களம் மிகவும் விசாலமானது.  எளிய விவரணைகளில் உள்ளது போன்று தோன்றினாலும், தேர்ந்த சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார். துறைசார்ந்த வழக்குச் சொற்களுக்கு அவர் அளித்திருக்கும் விளக்கங்கள், பயன்படுத்தப்பட்ட விதம் மிகவும் அருமை.  அலுவலக உள்குத்து வேலைகள், பணி நெருக்கடி அளிக்கும் மன அழுத்தங்கள், அவற்றை மீறிய நட்புகள், வலியுடன் கூடிய பிரிதல்கள், கார்த்திக்கின் சொற்களில் வாசகனை அவனது துவக்ககால பணி அனுபவங்களுக்கு இட்டுச் செல்லக் கூடியவை.  நுட்பமான வர்ணனைகளும், சூழலின் நுண்ணிய அவதானிப்புகளும் அவரது எழுத்துக்களில் நிறைந்திருக்கின்...

நாவல்

Image
அஸீஸ் பே சம்பவம் அய்ஃபர் டுன்ஷ் தமிழில் சுகுமாரன் காலச்சுவடு பதிப்பகம் 95 பக்கங்கள் நூலின் கணம், பக்கங்களின் எண்ணிக்கையைக் காண்கையில் வாசகன் தீர்மானித்துவிடும் வாசிப்பு காலஅளவு கணிப்புகளை புறந்தள்ளிவிடும் நுட்பமான படைப்புகளில் இந்நூலும் ஒன்று. //அந்த ஆழமான கண்களின் காதலில் அவன் விழாமல் இருந்திருந்தால்//  நினைப்பிற்கும், நிதர்சனங்களுக்குமான முரண்கள் அஸீஸ் பே - மரியம் காதலில் விரவியிருக்கின்றன. பழைய காதலை  அதன் நினைவுகளின் வெம்மையை ஆண் ஒருவன் பிரயத்தனமின்றி தனது மனைவியிடம் தெரிவிக்க முடிகிறது. பெண்ணிற்கு அது போன்றதொரு சமவாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.  மரியம் மீதான அஸீஸ் பேயின் ஈர்ப்பினை அறிந்து கொண்டுவிடும் அவனது தந்தை, மனைவிக்கு ஆறுதல் கூறி, தனது பழைய காதலின் நினைவுகளை மீட்டெடுத்து அவரது மனைவியின் மனதை உடைக்கிறார்.  உண்மையில் தம் பிள்ளைகளின் பதின்வயது காதல்களை பெற்றோர் அறிந்தே இருக்கின்றனர் அது குறித்த பிரக்ஞைகள் பிள்ளைகளுக்கு இருப்பதில்லை.  பெண்களின் மன வலிமை அசாத்தியமானது. ஓரிரு நாட்களில் குடும்பத்துடன் பெய்ரூட்டிற்கு இடம்பெற இருப்பதாக  தெரிவிக்கும் மரியம், ...

நாவல்

Image
மலர் மஞ்சம் தி ஜானகிராமன் ஐந்திணைப் பதிப்பகம் 584 பக்கங்கள்  அன்பு என்னும் உன்னத மாயக் கயிற்றினால் வலுவாகப் பிணைக்கப்பட்டுவிட்ட கதை மாந்தர்களை வேறு எந்த புனைவுகளையும்விட தி.ஜாவின் எழுத்துக்களில் கண்டுணரலாம். நம்பவே முடியாத ஆச்சரியம் அளிக்கும் அபூர்வ மனிதர்கள் அவர்கள்.  வாழ்வில் எதிர்கொண்ட சங்கடம் அளிக்கும் தருணங்களை மீளாய்வு செய்யவும், அளித்திருக்க வேண்டிய எதிர்வினைகள் குறித்தும் காலதாமதமாகவாவது அறிந்து கொள்ள முடிகிறது.  இக்கட்டான காலங்களில், கையறு நிலையில் அவ்விடம்விட்டு அகன்றுவிடவே மனது துடிக்கிறது. இடப்பெயர்வு ஏற்படினும் மனம் முந்தைய இடத்திலேயே நிலைத்து விடுவதை மறுக்க இயலவில்லை.  'உலகத்தில் அறிவு பிறந்த அன்றே நிம்மதியும், அமைதியும் போய்விட்டன', 'நன்றி கெட்டவர்களுக்கு மேலே மேலே நல்லது செய்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?' 'இவ்வளவு முழுமையுடன் அழிப்பதற்கு மனிதனால் தான் முடியும்'.  அறியாமையில் பெறக்கூடிய குறைந்தபட்ச பாதுகாப்பு, இன்பம், எதிர்பார்த்தலின் பின்விளைவான பெரும் ஏமாற்றம், கட்டற்ற மனிதனின் வன்செயல்கள் மேற்கண்ட வரிகளில் தி.ஜாவின் எழுத்துக்கள் மட்டுமே ...

நாவல்

Image
மரண தண்டனைக் கைதியின் இறுதி நாள் விக்தோர் ஹ்யூகோ தமிழில் குமரன் வளவன்  க்ரியா பதிப்பகம் 112 பக்கங்கள் 'மனிதர்கள் அனைவரும் தொடர்ந்து ஒத்திப் போடப்பட்ட மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள்தான்'  மரண தண்டனைக்கும், வறுமைக்கும் எதிரான தனது சமுதாயச் சிந்தனைகளால் இன்றுவரை நினைவு கூரப்படும் விக்தோர் ஹ்யூகோவின் புகழ் பெற்ற குறுநாவலின் தமிழாக்க நூல் இது.  அவன் தனது குற்றத்தை மறுக்கவில்லை, அது திட்டமிட்டதல்ல என்பதே அவனது வாதம். மரணதண்டனை உறுதி செய்யப்பட்டு வண்டியில் கொண்டு செல்லப்படும்போது இளம்பெண் ஒருத்தி உற்சாகமாக கொண்டாடி கொண்டு ஓடி வருகிறாள்.  கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டவர்களும், பொதுமக்களும் மரண தண்டனைக் கைதியை ஆவலுடன் காண்பதும், உற்சாக குரல் எழுப்புவதும் அவரவர் மன வக்கிரங்களை வெளிப்படுத்துகின்றன.  கடுங்காவல் தண்டனையைக் காட்டிலும், மரணமே மேல் என்றும் எண்ணுகிறான் அவன். தனியறை ஒன்றிலிருந்து கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் உடைகள் மாற்றப்பட்டும், சங்கிலிகள் இடப்படும், உண்பதற்கு தகுதியற்ற ரொட்டிகள் வழங்கப்பட்டும் அழைத்துச் செல்லப்படுவதை வேடிக்கை பார்க்கிறான்.  'த...

வாழ்க்கை வரலாறு

Image
எம் எஸ் சுப்புலட்சுமி உண்மையான வாழ்க்கை வரலாறு டிஜேஎஸ் ஜார்ஜ் தமிழில் ச.சுப்பாராவ் பாரதி புத்தகாலயம் 256 பக்கங்கள்  தொண்ணூறுகளின் மத்தியில் பட்டப்படிப்பு முடித்த கையோடு சென்னை கோட்டூர்புரத்தில் தனியார் குடிநீர் வழங்கல் நிறுவனம் ஒன்றில் சில மாதங்கள் பணியாற்றினேன். மாலை 6 மணிக்கு மேல் களைப்படைந்து அலுவலகத்தில் இருந்து கிளம்பிச் செல்கையில் பெண்கள் குழுவாக கர்நாடக சங்கீதம் இசைப்பது காதுகளில் விழும். திரையிசையைத் தாண்டி பாரம்பரிய சங்கீதம் குறித்து ஏதும் அறியாத போதும், காதுகளை இனிமையால் நிறைத்த கீதங்கள் அவை.  இந்நூலினை வாசித்தபோது இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இசையரசி எம் எஸ் சுப்புலட்சுமி, தனது வாழ்வின் இறுதி நாட்களில் கோட்டூர்புரத்தில்தான் வசித்து இருந்தார் என்பதை அறிந்து பெரிதும் மகிழ்ந்தேன். காற்றினில் வந்த கீதம் அவருடையதாகவும் இருந்திருக்கலாம்.  மானுட குரலுக்கு சாத்தியமே இல்லாதது போல தோன்றுவதை சாத்தியமாக்கும் வித்தையான 'கமகம்', எம்எஸ்ஸிற்கு இயல்பாகவே வாய்க்கப் பெற்று இருக்கிறது.  மணிக்கணக்கில் நீண்ட சங்கீத கச்சேரிகளை அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் சிறுசிறு கூறுகளாகப் பகு...

கவிதைகள்

Image
கொண்டலாத்தி  கவிதைத் தொகுப்பு  ஆசை  க்ரியா பதிப்பகம்  63 பக்கங்கள்  ஆசையின் 40க்கும் மேற்பட்ட பறவைகள் குறித்த கவிதைகளின் தொகுப்பு நூல் இது. க்ரியாவின் அழகியல் மிகுந்த பதிப்புக்கு மேலும் வசீகரம் கூட்டுபவை இந்நூலில் இடம்பெற்றுள்ள பறவைகளின் வண்ணப் புகைப்படங்கள். பறவையினங்களை வெகு நுண்மையாக அணுகி கவி பாடிக் களித்திருக்கிறார் ஆசை. தையல் சிட்டு பறந்து சென்றபின் அதிரும் இலைக் காம்பை பதிவு செய்பவர், மொழியின் முதல் சொல்லைக் கூட்டில் பறவை அடைகாப்பதாகவும் எழுதி வியப்பு தருகிறார்.  நுண்ணுணர்வு மிகுந்தவர்களே இலக்கியம் சார்ந்து இயங்க முடியும் என்பது நாம் அறிந்ததே. அதனினும் மென்மையானவர்களே கவி பாடவும், கூர்மையாக அவதானிக்கவும் கூடிய திறன் மிகுந்து திகழக்கூடிய நல்வாய்ப்பு அமையப் பெற்றவர்கள்.  பறவைகளின் உலகிற்குள் நுழைந்து அவற்றைக் குறித்த கவிதைகளையும் படைத்திருக்கும் ஆசை, தனது மிகத் துல்லியமான பார்வையாலும், படைப்பாற்றலாலும் வாசகனுக்கு தனது அனுபவங்களை நுட்பமாக கடத்தி விடுகிறார். 'கைக்கெட்டி வாய்க்கெட்டாக் கதை' தலைப்பில் அமையும் கவிதை, குயில், காக்கையின் கூட்டில் முட்டைய...