Posts

கதைகள்

Image
 ஆ மாதவன் கதைகள் முழுத்தொகுப்பு  நற்றிணை பதிப்பகம்  640 பக்கங்கள்  . ஆ மாதவனின் அறுபத்தி ஆறு கதைகளைக் கொண்ட முழுத் தொகுப்பு நூல் இது. நாஞ்சில் நாடனின் முன்னுரை இந்நூலின் மற்றுமொரு சிறப்பு.  தாய்மொழியான தமிழை பள்ளி அளவில்கூட கற்காதவரின் படைப்புகளில் தனித்துவம் பெருமிதத்துடன் மிளிர்கிறது. கிடைத்திருக்க வேண்டிய நியாயமான விருதுகள்கூட அவருக்கு மிக தாமதமாகவே அளிக்கப்பட்டிருக்கின்றன.  விருதுகள் அவருக்கு அளிக்கப்பட்டமையாலேயே தமது மதிப்பினை நிலைநிறுத்திக் கொண்டிருந்திருக்கும். மறுக்காமல் அவற்றை ஏற்றுக் கொண்ட செயல் அக்கலைஞனின் பெருங்குணம்.  தமிழின் முன்னோடி எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா, கு. அழகிரிசாமி , தி.ஜானகிராமன், அசோகமித்திரன், சார்வாகன் ஆகியோரது முழுத்தொகுப்பு நூல்களை வாசித்து இருந்தபோதும் இத்தொகுப்பில்  அமைந்துள்ள கதைகள் முற்றிலும் தனித்ததொரு வாசிப்பு அனுபவம் அளித்தவை.  சாலைக் கடை  மாந்தரை புனைவில் அழகியலுடன் உலவ விட்டிருக்கிறார் மாதவன். சாலைக் கடையில் உலவித் திரியும் மாடு, நாய் முதற்கொண்டு இரந்து வாழும் மாற்றுத்திறனாளி வரை ...

விமர்சனக்கலை

Image
 விமர்சனக்கலை க.நா.சு  மின்நூல்  177 பக்கங்கள்  புத்தக மதிப்புரைகளுக்கும், விமர்சனத்துக்குமான நுட்பமான வேறுபாடுகளை மிகத்துல்லியமான அவதானிப்புடன் அணுகும் முதல் கட்டுரையில் இருந்து துவங்கி, மொழிபெயர்ப்புக் கலை, அயல் இலக்கிய மதிப்பீடுகள் வரை க.நா.சுவின் மேம்பட்ட புரிதலுடனான பார்வையில் அமைந்திருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.  எந்த விதிக்கும் கட்டுப்படாத ஆளுமையாக, இலக்கியத்தின் எந்த ஒரு வகைமையிலும் ஈடுபடுபவர் இயங்குதல் வேண்டும் என்ற கருத்து முற்றிலும் சமரசம் அற்றவனாக கலைஞனை காணவேண்டி கூறப்படுகிறது. //எதையும் அனுதாபத்தோடு பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இலக்கியத்தில் அனுதாபம் தேவையே இல்லை. எந்த இலக்கிய ஆசிரியனுக்கும் யாருடைய அனுதாபமும், ஊக்குவித்தலும் தேவையில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது//  விமர்சனக் கலையின் மிகப்பெரும் ஆளுமையாக க.நா.சு இன்று வரை கொண்டாடப்படுவதன் காரணத்தை சற்று எடுத்துக்காட்டும் வரிகள் மேற்கண்டவை.  தமிழில் மிகவும் ஆர்வமுடன் வாசிக்கப்படும் எழுத்தாளர்களின் புனைவுகளைக் காட்டிலும், நூல் விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய அபுனைவு படைப்புக...

நாவல்

Image
 கிருஷ்ணப் பருந்து  ஆ.மாதவன்  நற்றிணை பதிப்பகம்  126 பக்கங்கள்  முன்னோர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டு வாழும் குருஸ்வாமி, சாமியப்பாவாகவே அறியப்படுகிறார். சுய உழைப்பில் விளையாதவை என்ற அச்சம் தனது சொத்துக்களின் மீது அவருக்கு ஏற்படுகிறது.  குறைவான வாடகைக்கு கடைகளை அனுமதிப்பதில் இருந்து, ரவி, பார்வதி, வேலப்பன்,ராணி  உள்ளிட்டவர்களிடம் வாஞ்சையுடன் நடந்து கொள்வதுவரை இதனை அறிய முடியும்.  அம்மு அம்மையின் ஆறுதலளிக்கும் தூயநெருக்கம், தந்தையுடன் அவளைக் காண நேர்கையில், மேகம் போன்று கலைந்து செல்கிறது.  மொட்டை மாடியில் தனியறை வசிப்பு, புத்தக வாசிப்பு என நேர்கோட்டு முறையில் செல்லும் சலனமற்ற வாழ்வு, இயல்பான மன எழுச்சிகளை உள்ளடக்கியதாகவும் புனையப்பட்டு இருப்பது சிறப்பு.  தோப்புவிளையின் மரங்களில் வந்தமரும் கிருஷ்ணப்பருந்தாகவே குருஸ்வாமியின் உள்ளுணர்வுகள் நீடிக்கிறது.  துவக்கத்தில் தனது நண்பனின் மகளை வேலப்பன் மணந்து கொள்ள உறுதியாக மறுத்து விடுபவர், தேவி கோவிலில் இருந்து வெளிப்படுகையில் புன்னகையுடன் அச்செயலை அனுமதிக்கிறார். கோயில் உட்பிரகாரங்களின் ஓவிய...

வரலாறு

Image
 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்  மயிலை சீனி வேங்கடசாமி மின்நூல்  210 பக்கங்கள்  களப்பிரர்கள் ஆட்சியை தமிழகத்தின் இருண்ட காலம் என்றும், வரலாற்று ஆவணங்கள் ஏதுமற்ற காலகட்டம் என்றும் இளம் வயதில் பாடநூல்களின் வாயிலாக அறிந்து வைத்திருந்த தேய்ந்துபோன தட்டையான கருத்துக்களை மாற்றி அமைத்துவிட்ட நூல் இது.  தனது வாழ்வில் உடல்வாதையும், மன அழுத்தமும் மிகுந்த நாட்களில் இந்நூலை படைத்ததாகக் கூறும் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள், பின்னுரையில் தரும் குறிப்புதவி  நூல்களின் பெரும் பட்டியல் மலைப்பைத் தருகிறது.  'வடுகர்' எனப்படும் கன்னட மொழியை தாய்மொழியாகக் கொண்ட களப்பிரர்கள் வைணவ சமயத்தைச் சார்ந்தவர்களாயும், சேர, சோழ ,பாண்டியரை வென்று மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆட்சி புரிந்தும் இருக்கிறார்கள்.  இவர்களின் காலம் கிபி 250 முதல் கிபி 575 வரை நீடித்திருக்கும் என்று சான்றுகளுடன் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.  'அச்சுதன்' என்ற பொதுப் பெயரால் அழைக்கப்பட்ட அரசர்களும், அவர்தம் ஆட்சியில் பௌத்த, சமண மதங்கள் சிறந்தும் விளங்கியமை நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.  இ...

இந்திய வரலாறு

Image
 இந்திய வரலாறு  இஎம்எஸ் நம்பூதிரிபாத்  தமிழில் பி.ஆர்.பரமேஸ்வரன்  பாரதி புத்தகாலயம்  144 பக்கங்கள்  ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகக் காலங்களில் இருந்து துவங்கி இருபதாம் நூற்றாண்டின் மையம் வரையிலான இந்திய வரலாற்றை மார்க்சிய பார்வையில் பேசும் நூல் இது.  நான்கு வர்ணங்களும், சாதிய முறையும் தோன்றியமை குறித்த கட்டுரைகளும், டெல்லி சுல்தான்கள், மொகலாயர்கள் குறித்த தகவல்களும் இந்நூலின் சிறப்புகள். சுதந்திரத்திற்குப் பிறகான காங்கிரஸின் அணுகுமுறைகள், ஆங்கிலேயர் ஆட்சியுடனான ஒப்பீடு ஆகியன புதிய தகவல்களாக அமைகின்றன.  தென்னிந்தியாவின் தனித்தன்மை கொண்ட செழுமையான பாரம்பரியம் குறித்தும் விளக்குகிறார் தோழர்.  சிந்துவெளி நாகரிகத்திற்கு பெரும் அடிப்படையாக அமைந்த அணைக்கட்டுகளை ஆரியர்கள் தகர்த்ததும், தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியமையும் விரிவாக இந்நூலில் இடம் பெறுகிறது. இச்சிறிய நூல் 4000 ஆண்டுகளின் இந்திய வரலாற்று நிகழ்வுகளை சுருக்கமாக விளக்கி விடுகிறது. அதுவே இந்நூலின் சிறப்புத் தன்மையாகவும் அமைகிறது.

இருவேறு உலகம்

Image
 இருவேறு உலகம் விக்ரமாதித்யன்  மின்நூல்  330 பக்கங்கள்  கவிஞர் விக்ரமாதித்யன் பத்திரிகையாளராக பணியாற்றிய காலங்களில் நிகழ்த்திய நேர்காணல்கள், விமர்சனக் கட்டுரைகள் ஆகியனவற்றின் தொகுப்பு இந்நூல். எண்பதுகளின் மத்தியில் பல பத்திரிகைகளில் வெளியாகியிருக்கும் இந்நேர்காணல் தொகுப்புகளில், ஆளுமைகளின் எதிர்வினைகள் ஆச்சரியம் அளிப்பவையாக உள்ளன.  வெகுஜன இதழ்களில் கொண்டாடப்படும் ஆளுமை ஒருவரும், தீவிர இலக்கிய இதழ்களில் நிலைபெற்றிருக்கும் ஆளுமை ஒருவரும் என்ற வகையில் இரட்டைத்தன்மையுடன் இக்கட்டுரைகள் அமைந்திருத்தல் மிகவும் சிறப்பு. 'எஸ்தர்' சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதப்பட்டுள்ள விமர்சனக் கட்டுரையும், கோணங்கியின் முதல் சிறுகதைத் தொகுப்பிற்கான கட்டுரையும் மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளவை.  சமரசம் இல்லாத ஒருவித கறார்த் தன்மையுடன் இருப்பவை விக்ரமாதித்யனின் எழுத்துகள். நல்ல கலைஞனுக்கான அடையாளமாக அதுவே அமைந்துவிடுகிறது.  கவிஞர் கலாப்ரியாவின் படைப்புகள் மற்றும் மூத்த படைப்பாளி வண்ணதாசனின் ஓவியங்கள் குறித்த தகவல்கள் வாசிக்கையில் அலாதியான மகிழ்வு தருபவை.

பசித்த மானிடம்

Image
 பசித்த மானிடம்  கரிச்சான் குஞ்சு  காலச்சுவடு பதிப்பகம்  271 பக்கங்கள்  அழகியல் மற்றும் நோய்மையின் குறியீடுகளாக புனையப்படும் மனித உடல், மிதமிஞ்சியக் காமம், வரையறைகளைத் தகர்த்து நிகழ்ந்துவிடும் அத்துமீறல்கள், பணம் ஒன்றையே பெரும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகையில் நிகழ்ந்துவிட சாத்தியம் உள்ளவை அனைத்தையும் விவரித்துச் செல்கிறார் கரிச்சான் குஞ்சு.  40 ஆண்டுகளுக்கு முன்னரே ஓரினச்சேர்க்கை குறித்து புனைவில் கொண்டுவந்திருப்பதும், தேர்ந்த படைப்பாளி ஒருவரின் ஒற்றை நாவல் படைப்பாக உள்ளதுவும் இந்நாவலின் சிறப்புகள்.  300 க்கும் குறைவான பக்கங்களைக் கொண்ட இந்நாவலை வாசித்து நிறைவு செய்ய 4 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. இத்தனைக்கும் ஆண்டுக் கணக்காக இந்நூலுக்காக காத்துக்கொண்டிருந்தேன்.  செல்லும் இடமெல்லாம் எவ்வித பேதமுமின்றி கணேசன் அரவணைக்கப்பட்டு விடுவதும், 'கிட்டா' தனது சிறுசிறு முன்னெடுப்புகளின் விளைவாகவே பெரும் செல்வங்களை அடைந்துவிடுதலும், புனைவின் நேர்மறையான அணுகல்களாகவே தோன்றுகிறது.  கணேசன்மீது பரிதாபப்பட்டு அழைத்துவரும் வாத்தியார், வீடு நிறைய புத்தகங்கள...