Posts

வலசைப் பறவை

Image
வலசைப் பறவை ஜெயமோகன் நற்றிணை பதிப்பகம் 104 பக்கங்கள்  ஜெயமோகனின் 16 அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நிகழ்வுகள் குறித்து உடனடி எதிர்வினைகளை ஆற்றாது சலசலப்புகள் நீங்கியபின் அமைதியாக, உறுதியாக தனது  கருத்துக்களை உரிய தரவுகளுடன் அளிப்பதையே பெரிதும் விரும்புவதாக பதிவு செய்கிறார் ஜெமோ.  சமகால நிகழ்வுகளுடன், சரித்திர நிகழ்வுகளையும் ஒப்பீடு செய்து அவர் அளிக்கும் கட்டுரைகள், கருணையற்ற அதிகார பீடத்தின் குணங்களை உள்வாங்கிக் கொள்ளச் செய்கிறது.  அரசியல் தலைமைகளின் புதிய நம்பிக்கைகள், சரிந்துவிழும் அடுக்குகளை அறிய நேர்கையில் மதிப்பீடுகளும் பொய்த்துவிடுகின்றன.  திராவிட இயக்கங்கள், தி.ஜாவின் நாவல்கள், கு.ப.ராவின் சிறுகதைகள் குறித்த ஜெமோவின் கூர்மையான விமர்சனச் சொற்கள் முழுமையாக உடன்பட்டுவிட இயலாதவை.  கம்யூனிசம், பெரியாரியம் குறித்த அவரது கருத்துக்களையும் அதே போன்றுதான் கருத வேண்டியுள்ளது.  எண்பதுகளில் ராஜீவ் அரசு தொலைத்தொடர்புத் துறையில் பெரும் கனவுடன் நிகழ்த்திய முதலீடுகள் குறித்தும், தற்போதைய அத்துறையின் அசுர வளர்ச்சி குறித்தும் தீர்க்கமாக இந்நூலில் எழுதியிரு...

கட்டுரைகள்

Image
 அங்கே இப்ப என்ன நேரம்? அ.முத்துலிங்கம் மின்நூல் 476 பக்கங்கள் நன்கு எழுதப்பட்ட ஒரு கட்டுரை சிறுகதை ஒன்றை வாசித்துவிட்ட அனுபவம் தருவதாய் இருத்தல் வேண்டும் என்று அசோகமித்திரன் கூறியதாக எங்கோ வாசித்த ஞாபகம்.  உயிர்மை, காலச்சுவடு இலக்கிய இதழ்களில் முத்துலிங்கத்தின் சிறுகதைகளை வாசித்த நாட்களில் அவை கட்டுரைகளை வாசித்தது போன்ற உணர்வினை ஏற்படுத்தின.  கிண்டிலில் விலையின்றி பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்நூலில் 48 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கலைஞன் ஏமாளியாக, கோமாளித்தனம் நிறைந்தவனாக பல தருணங்களில் பொது சமூகத்தின் பார்வையில் அறியப்பட்டாலும் அவனது அனுபவம் வாசிப்பு தளத்தில் இலக்கியமாக உருப்பெற்றுவிடுகிறது.  வாகன ஓட்டுநர் உரிமம் பெறும் நிகழ்வு முதல் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்குதல், திரைக் கலைஞர் உடனான சந்திப்பு என 48 கட்டுரைகளிலும் நிறைந்திருக்கும் மெல்லிய அங்கதச் சுவையுடன் கூடிய அழகான நடை புதுமையான வாசிப்பனுபவத்தை அளித்துவிடுகின்றன.  வாசிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமைதல் வேண்டும் என்று ஆண்டன் செகாவ் கூறியதாக சமீபத்தில் வாசித்தேன்.  இம்மின்நூல் அத்தகையதொரு மகிழ்ச்சி...

கானகத்தின் குரல்

Image
 கானகத்தின் குரல் ஜாக் லண்டன் பெரியசாமி தூரன் 181 பக்கங்கள்  உரையாடல்களே இடம்பெறாத கதை சொல்லுதல் பாணியிலேயே அமைந்திருக்கும் நாவல் இது.பூமியின் வடதுருவத்திற்கு ஆர்ப்பாட்டமின்றி நம்மை அழைத்துச் சென்றுவிடும் புனைவு.  நீதிபதி ஒருவரின் பங்களாவில் சுகமாக வாழ்ந்து வரும் நாய் 'பக்', வணிகரீதியான பயன்பாட்டிற்காக திருடப்பட்டு பயிற்றுநர்களின் வசம் ஒப்படைக்கப்படுகிறது. 'பக்' போன்றே பல புதிய நாய்களும் அங்கு வண்டி இழுப்பதற்காக பயிற்றுவிக்கப்படுகின்றன. தடியால் பலமுறை தாக்கப்பட்டும், பழகிய மற்றொரு நாயினால்  கடிபட்டும் நிதர்சனத்தை உணர்ந்து பணிந்து போகிறது 'பக்'.  புதிய சூழலில் தனது செல்வாக்கினை ஏற்படுத்திக் கொண்டு அனைவரையும் வசீகரிக்கிறது.  ஆடம்பரமான மாளிகை வாசத்திலிருந்து உணவுக்கு பிற நாய்களுடன் போட்டியிட வேண்டிய சூழலுக்கு தன்னை தயார் செய்து கொள்கிறது.  முதலிடத்தில் நீடிக்கும் நாயுடன் பலமாக போட்டியிட்டு வென்று, அவ்விடத்தை கைப்பற்றுகிறது.  பனிப்பாறைகளால் உறைந்துவிட்ட ஆற்றினூடே  பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தத் தவறவில்லை இந்நூல்.  'டாஸன்' பகுதியை நோக்கி ...

பயணம்

Image
 எனது பர்மா வழி நடைப்பயணம் வெ.சாமிநாத சர்மா மின்நூல் 232 பக்கங்கள் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலங்களில் ஜப்பானிய குண்டு வீச்சுக்கு அஞ்சி அகதிகளாக பர்மாவில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்து அறிந்திருப்போம்.  எழுத்தாளர் வெ. சாமிநாத சர்மா தனது புலம்பெயர்வு குறித்து இக்கட்டுரைகளில் விவரிக்கிறார். பர்மா முதல் சென்னை வரையிலான ஒன்றரை ஆண்டுகள் நீண்ட தனது பயணத்தை சாகசப் பயணமாக அவர் கருதிவிடவில்லை.  மன உறுதியுடன் எதிர்கொள்ள நேர்ந்த அசாதாரணமான சவால்களை, உடைந்த மனதுடனும், நுட்பமான அவதானிப்பு அளித்த எழுத்து வன்மை மிகுந்த பார்வையுடனும் பதிவு செய்திருக்கிறார்.  தெளிவான திட்டமிடலுடன் துவங்கப்பட்ட பயணங்களின்போது, இடையில் நேரிட்டுவிடும் தடங்கல்களே நம்மை பெரும் பதற்றத்துக்கு ஆளாக்கிவிடும்போது, நிச்சயமின்மைகளின் தொகுப்புகளாகவே மாறிவிட்ட சாமிநாத சர்மாவின் பயணம் மன தைரியங்களுக்கெல்லாம் சவால் விடக்கூடியது. பெரும் உழைப்பினால் ஈட்டிய பொருட்களை கைவிட நேர்ந்ததையும், கதவுகளைக்கூட  அடைக்காமல் கிளம்பியதையும் உறுதியாகக் கூறுகிறார் சர்மா.  பர்மியர்கள், மணிப்பூரிகள் குறித்த அவரத...

இசை

Image
 காலத்தை இசைத்த கலைஞன் இளையராஜா80 ஜி குப்புசாமி மின்நூல் காலச்சுவடு பதிப்பகம் 37 பக்கங்கள் மனம் முழுவதும் அன்பும், மகிழ்ச்சியும் நிரம்பி வழிந்த தருணங்களிலும், நம்பிக்கைகள் அனைத்தையும் இழந்து வெறுத்துப் போயிருந்த நாட்களிலும் துணையாக இருந்தது ராஜாவின் இசைதான்.  பத்து வயதுகூட பூர்த்தியாகாத நாட்களில் கேட்க நேர்ந்த ராஜாவின் திரையிசைப்பாடல்கள் இவ்வளவு ஆண்டுகள் கழித்து கேட்கும்போதும் விவரிக்க இயலாத ஒருவித பரவச நிலையை உணர்த்திவிடுகிறது.  ராஜாவுடனான சந்திப்பு பற்றிய குறிப்புகள், மின்னம்பலம் கட்டுரை, தி இந்து தீபாவளி மலர் கட்டுரை என மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது இச்சிறுநூல். 'ஏகாக்கிரக சிந்தனையோடு, மிக மிகக் கடுமையான உழைப்பில் தன்னைத்தானே வருத்திக்கொண்டு, தொழிலின் மீது அளப்பரிய பக்தியோடு, தன்னை அர்ப்பணித்துக் கொண்ட வகையில் இளையராஜா அபூர்வத்திலும் அபூர்வமான கலைஞர்தான்'.  ஜி குப்புசாமி அவர்களின் மேற்கண்ட வரிகளே ராஜாவின் மீதான அவரது பிரம்மிப்பை விளக்கி விடுகிறது.  ஒவ்வொருவரையும் ராஜாவின் ஒவ்வொரு பாடல் முழுமையாக வசீகரித்து, அகத்தில் நீங்காது நிலைபெற்று விடுகிறது.  எனக்கு...

வேள்வித் தீ

Image
 வேள்வித் தீ எம் வி வெங்கட்ராம் காலச்சுவடு பதிப்பகம் 175 பக்கங்கள் கண்கள், கரங்கள், கால்கள் பெரும் ஒருங்கிணைப்போடு தொடர்ச்சியாக இயங்கியாக வேண்டிய பெரும் உடல் உழைப்பைக் கோரும் பணி நெசவாளர்களுடையது.  பள்ளிக்கு சென்ற நாட்களில் தறிகளின் சத்தத்தைக் கேட்டுக்கொண்டே சென்றதுண்டு. மதிய உணவு அருந்த அருகாமை நெசவாளர்களின் இல்லங்களுக்கு குழுவாகச் செல்வோம்.  அன்பான உபசரிப்புகளுக்கும், அக்கறை மிகுந்த அறிவுரைகளுக்கும் பஞ்சமே இல்லாத அன்பு இல்லங்கள் அவை. காலம் முழுக்க மறக்கவே இயலாத என் ஆதர்ச நாயகன் 'சுப்புராயலு வாத்தியார்' நெசவாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். வகுப்பறைக் கற்பித்தல் நேரங்களில் ஒரு நிமிடத்தையும் வீணடித்திடாத அவரது உழைப்பு நெசவுத் தொழிலால் அவர் கைக் கொண்டிருந்ததாக இருக்கலாம்.  பட்டு நெசவு தொழிலில் ஈடுபடும் கண்ணனின் போராட்டம் மிகுந்த வாழ்வினை பேசும் நாவல் இது. நன்றாகப் படித்த போதும் தமையனின் சுயநலத்தால் சிறுவயதிலேயே நெசவுத் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறான் அவன்.  மழையில் தொடங்கும் நாவல் மழை பெய்து கொண்டிருக்கும் வேறொரு தருணத்திலேயே நிறைவு பெறுகிறது.  அரசியல் நிகழ்வுகள், க...

ஒரு சிறு இசை

Image
 ஒரு சிறு இசை வண்ணதாசன்  சந்தியா பதிப்பகம் 160 பக்கங்கள்  வண்ணதாசனின் 15 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். முதுமையின் தளர்வுகளை, நுண்ணிய அவதானிப்புகளை, பக்குவம் எய்திய வார்த்தைப் பிரயோகங்களை 'ஒரு தாமரைப் பூ ஒரு குளம்' கதை பேசுகிறது.  சோமுவின் மரணத்தை அறிய நேரிடும் ஜான்சி, துக்கம் மேலிட நினைவுகளுடன் நிகழ்காலத்தில் பயணிக்கிறாள். மனதிற்கு நெருங்கியவர்களின் மரணங்கள் அளித்திடும் அதிர்வுகளும், நினைவு மீட்டல்களுமாக நகர்கிறது 'எண்கள் தேவையற்ற உரையாடல்கள்' கதை.  ஆசிரியர்- மாணவர் உறவின் நெகிழ்ச்சியூட்டும் தருணங்களும், அக்கம்பக்கம் குடியிருப்பவர்களுடன் மனம் ஒன்றி அமைந்துவிட்ட நம்பவே முடியாத அபூர்வ பிணைப்புகளும் வண்ணதாசனின் கதைகளில் வாசிக்க நேர்கையில் பெருமிதமும், ஏக்கமும் தோன்றி கலங்க வைக்கின்றன. சென்ற தலைமுறையில் கிராமங்களில் சற்று வசதியான வீடுகளில் மிக விசுவாசமான பணியாளர்களை அறிந்திருப்போம். தன்வீட்டு மக்களிடம் அவர்கள் காட்டும் அன்பும், உறுதியான ஆதரவும்  இத்தலைமுறை மனிதர்கள் அறிந்திராதவை.  'சந்தனம்' இதுபோன்ற நினைவுகளை எல்லாம் சுலபமாக கிளறி விட்டு தன் போக்கில் சென்...