Posts

சொன்னால் நம்ப மாட்டீர்கள்

Image
சொன்னால் நம்பமாட்டீர்கள் சின்ன அண்ணாமலை மின் நூல்  சிறியதும், பெரிதுமான 60 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் 'சொன்னால் நம்ப மாட்டீர்கள்!' என்ற சொற்கள் இடம் பெற்று விடுகின்றன.  விடுதலைப் போராட்ட வீரராகவும், காங்கிரஸ் பேரியக்க தொண்டராகவும், தமிழ்ப் பண்ணை பதிப்பாளராகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும் வாழ்ந்து மறைந்திருக்கிறார் சின்ன அண்ணாமலை.  இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பெரும்பாலான தமிழ்நாட்டு ஆளுமைகளுடன் நல்லதொரு தொடர்பு வாய்க்கப் பெற்றிருக்கிறது இவருக்கு.  திருவாடானை சிறையிலிருந்து மக்களால் விடுவிக்கப்பட்டதிலிருந்து, தலைமறைவு வாழ்வு, பதிப்பாளராக செயல்பட்டமை என்றவாறு அவரது அனுபவங்கள் வண்ணமயமானவை.  தத்துப் பிள்ளையாக தன்னை வழங்க தந்தையார் முடிவெடுத்ததையும், அம்முடிவை உறுதியாக எதிர்க்கும் அவரது அப்பத்தா, தமது வம்சமே  ஆண்வாரிசு அற்றுப்போகும் என்று புலம்பியதையும் குறிப்பிடுபவர், தனது அப்பத்தா அஞ்சியது போன்றே நடந்து விட்டதை எண்ணி வருந்துகிறார்.  பெரியாரை விமர்சித்து அவரது மேடையிலேயே பேசி பத்து ரூபாய் சன்மானமாக வாங்கியிருக...

கல்வி

Image
 மயிர்தான் பிரச்சினையா? கல்விசார் கட்டுரைகள் பெருமாள் முருகன்  காலச்சுவடு பதிப்பகம்  166 பக்கங்கள்  காலச்சுவடு இதழ்களிலும், அருஞ்சொல் இணைய இதழ்களிலும் பெருமாள் முருகன் கடந்த சில ஆண்டுகளாக எழுதிய 25 கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது.  கல்லூரி ஆசிரியராகவும், தேர்ந்த எழுத்தாளராகவும் நிலைபெற்றிருக்கும் பெருமாள் முருகன், கல்வியாளர் நிலையில் தனது  ஆதங்கங்களையும், சிந்தனைகளையும் வியக்கவைக்கும் நடுநிலையுடன் எழுதியுள்ளார்.  கல்வி வியாபாரம் குறித்த கட்டுரைகள் முகத்திலடிக்கும் உண்மைகளை தெளிவாகப் பேசுகின்றன. நஷ்டமில்லா பெருவியாபாரமாகிவிட்ட தனியார் பள்ளிகள் குறித்த தகவல்கள் கல்விப்புலத்தில் பணியாற்றுபவர்கள் அறியாதவை அல்ல.  கலகக் குரல் என்றுமே உரிய தாக்கங்களை ஏற்படுத்துவதுடன், உகந்த சந்தர்ப்பங்களில் கருணையின்றி நடத்தப்படும் அவதூறுகளுக்கும் ஏதுவாகி விடுகிறது. வெறும்  பணத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படும் இவ் வணிகர்களிடம் அறத்தை எதிர்பார்ப்பது பேதமையன்றி வேறென்ன?  ஆசிரியர் சமூகம் குறித்த பெருமாள் முருகனின் கட்டுரைகள் பெரும் எதிர்ப்புகளை அவருக்கு அளித்...

கட்டுரைத்தொகுப்பு

Image
 ஏகே செட்டியார் படைப்புகள் முதல் தொகுதி பதிப்பாசிரியர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் சந்தியா பதிப்பகம்  ஆயிரம் பக்கங்கள் 'ஒரு பிறவியில் பல பிறவிகளுக்குரிய அனுபவங்களைத் தருவது வாசிப்பின் பயன்' என்று நண்பர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கூறினார். தினமணி நாளிதழில் நடுப்பக்க கட்டுரையில் இன்று அதே வரியை கிருங்கை சேதுபதி அவர்கள் கூறியிருக்கிறார். வாசிப்புப் பழக்கம் உடையவர் ஊர் சுற்றும் இயல்பினராகவும் இருக்கையில் அனுபவங்களின் அளவு பன்மடங்கு அதிகரித்து விடுகிறது. ஏகே செட்டியார் மிகமிக அரிய மனிதர் அவரது மேம்பட்ட சிந்தனையும், ஊர்சுற்றும் குணமும், காந்தி மீதான காதலும், தன்னை ஒருபோதும் முன்னிலைப்படுத்திக் கொள்ளாத இயல்பும் நம்பவே முடியாதவை.  இரு தொகுதிகளாக 2000 பக்கங்களுக்கு நீளும் இத்தொகுப்பு பணியில் ஈடுபட்ட கடற்கரய் அவர்களின் மெனக்கெடலை நினைத்துப் பார்க்கையில் ஆச்சரியம் ஏற்படவில்லை. ஏனெனில் காந்தியின் மீதான ஏகே செட்டியாரின் காதலைப் போன்றதுதான் செட்டியார் மீதான கடற்கரயின் ஈர்ப்புணர்வு என்றவாறு தெளிந்து கொள்ளலாம். அவரது நீண்ட முன்னுரையே அதற்கு சாட்சி. ஏகே செட்டியார் தயாரித்த மகாத்மாவின்...

கனவுச்சிறை

Image
 கனவுச்சிறை  தேவகாந்தன்  999 பக்கங்கள்  காலச்சுவடு பதிப்பகம்  பள்ளி நாட்களில் இலங்கைத் தீவு குறித்து ஆசிரியர்கள் மூலம் அறிந்திருந்தோம். இந்திய அமைதிப்படை இலங்கை மண்ணில் இருந்த நாட்கள் அவை.  'அமைதிப்படை' ஏன் சண்டை இடுகிறார்கள்? என்றெல்லாம் எண்ணிய வயது அப்போது.  இயக்கங்கள் குறித்த தகவல்கள், தமிழகத்தில் பத்மநாபா உள்ளிட்ட போராளிகளின் படுகொலைகள் பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருந்தன. ராஜீவின் மரணம் ஆறாத வடு ஒன்றை உருவாக்கியிருந்தது. அத்துன்பியல் நிகழ்வுக்குப் பிறகான ஆண்டுகளில் ஈழத் தமிழர் வாழ்வு குறித்து அடிப்படை புரிதல்கள் ஏற்பட்டன.  மலையகத்தமிழர் எனப்படும் இந்திய வம்சாவளியினர், பூர்வீக இலங்கைத் தமிழர், இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் என்றவாறு புரிதல் நீண்டது.  இலங்கைத் தமிழை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்குமளவு அத்தனை இனிமையாக உணர்ந்திருந்தோம் நாங்கள்.  இறுதிக் கட்டப்போர் நடைபெற்ற தருணங்களில் நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளாக ஒவ்வொரு நாளும் தமிழர் கட்டுப்பாட்டில் இருந்த ஒவ்வொரு இடமாக வீழும்போது சொல்லொணா துயரமொன்று பரவியதை மறுக்க இயலாது...

நாவல்

Image
ஆகாயத்தாமரை அசோகமித்திரன் நற்றிணை பதிப்பகம்  160 பக்கங்கள்  1970களின் சென்னை நகரத்தை நுட்பமாக காட்சிப்படுத்திவிடும் புனைவு இந்நூல்.  நகரத்துச் சூழல் ஆணின் வேலையின்மையை முற்றிலுமாக நிராகரித்து வேலையற்ற அவனது இருப்பினை கேள்விக்குள்ளாக்கி விடுகிறது.  ரகுநாதன் தற்காலிக பணி நீக்கத்தால் அதிர்ந்து மனம் போன போக்கில் செல்கிறான். மாலதியால் அவனது சிந்தனைகளுடன் உடன்பட இயலவில்லை.  மாலை நேரத்தில் குடிபோதையுடன் அவனிடம் அளவளாவும் ராஜப்பா, பிரிதொரு தருணத்தில் அலட்சியப்படுத்தி விரட்டுகிறார்.  மாலதியுடன் காரில் செல்பவன், ராஜப்பாவின் வீட்டிற்கே செல்ல நேர்வது அவனுக்கு வியப்பளிக்கிறது.  மகனது வேலை பறிபோவதை எளிதாக ஊகித்துவிடும் ரகுநாதனின் தாய் தொடர்ச்சியாக ஏற்படவிருக்கும் பொருளாதாரச் சிக்கல்களை எண்ணியும் வருந்துகிறாள்.  சிறுசிறு உதவிகளை அக்குடும்பத்திற்கு மெனக்கெட்டு செய்யும் பாலகிருஷ்ணன், ரகுநாதனால் உதாசீனப்படுத்தப்படுகிறார். தாயின் பேச்சிலுள்ள நியாயத்தை அவனது மனம் ஏற்கிறது.  ஜெமினி மேம்பாலம் கட்டப்படுதல், நேப்பியர் பாலம் விரிவாக்கப்படுதல் போன்ற அன்றைய செய்திகளை எ...

குறுநாவல்கள்

Image
 நண்பனின் தந்தை அசோகமித்திரன் நற்றிணை பதிப்பகம்  111 பக்கங்கள்  இரண்டு குறுநாவல்கள், மூன்று சிறுகதைகள் கொண்ட தொகுப்பு நூல் இது.  மிக மிக இயல்பான எளிய வார்த்தைகளைக் கொண்டு பெரும் புனைவை படைத்துவிடும் வல்லமை வாய்க்கப்பெற்றவர் அசோகமித்திரன்.  தயக்கம் நிறைந்த, கோழைத்தனம் கொண்ட கதை மாந்தர்கள் அவரது புனைவுகளில் நிலைபெற்றிருக்கிறார்கள்.  'ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே எப்படி ஒரு மனிதரை விழுங்க முடியும்?'  பிறப்பதற்கு முன்பே அப்பாவை இழந்து விடுகிற குழந்தைக்கு தமிழில் கடுமையான சொற்களில் அளிக்கப்படும் வசை குறித்த கவலை தோய்ந்த வரி மேற்கண்டது.  பணியாளனை கொதிக்கும் சோப்புக்கூழில் தள்ளிக் கொன்றுவிடும் மேற்பார்வையாளன், நள்ளிரவில், மழையில் இல்லம் தேடிவந்த பெண்ணை பத்திரமாக அவளது இருப்பிடத்தில் சேர்த்துவிட்டு வரும் பெண் என 'பம்பாய் 1944' குறுநாவல் மானிடரின் வன்மம் கருணை குறித்து உரையாடுகிறது.  புரிந்து கொள்ளவே இயலாத தொடர் நிகழ்வுகள், நம்ப முடியாத திருப்பங்கள் எனச் செல்லும் தனிநபர் வாழ்வில் இலக்கியவாசிப்பு பெரும் ஆசுவாசமாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் நீடிக்கிற...

மொழிபெயர்ப்பு

Image
இருட்டியபின் ஒரு கிராமம்  தமிழில் ஜி குப்புசாமி  வம்சி பதிப்பகம்  360 பக்கங்கள்  உலகின் குறிப்பிடத்தகுந்த 15 எழுத்தாளர்களின் 20 சிறுகதைகளின் தொகுப்பு நூல் இது.  தனது கலை வாழ்வின் உச்சத்தை அடைந்த படைப்பாளி,நம்ப முடியாத வீழ்ச்சியையும் அடைந்து, நிசப்தத்தை இசையின் மற்றுமொரு வடிவமாக எடுத்துக்காட்டி வாதிடும் கதை 'நிசப்தம்'. உண்மையை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வெளிப்படுத்தலாம் என்கிறான் அக்கலைஞன்.  சூதாட்டக்காரனாகவும், பெருந்தீனிக்காரனாகவும் அறியப்படும் தெலாகூ, நகராட்சி அறிமுகம் செய்யும் குளியலறை திட்டத்தின் 40 சந்தாதாரர்களில் ஒருவராகிறார். ஒவ்வொருவரும் மரணம் அடைகையில் அவருக்குரிய வட்டித்தொகை உயிருடன் நீடிக்கும் பிற சந்தாதாரர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. தெலாகூ பிறர் மரணத்தை விரும்பி எதிர் நோக்குகிறார்.  இளமைப் பருவ தன்னம்பிக்கைக்காரர்கள், வாலிப வயதிலும், தொடர்ந்த முதிய வயதிலும் வாழ்வின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல் தளர்ந்து விடுவதை நினைவுபடுத்துகிறார் 'இருட்டியபின் ஒரு கிராமம்' கதையில் வரும் பிளெட்சர்.  அசோகமித்திரன் கதை ஒன்றில் குழுவாக சிறுவ...