Posts

நாவல்

Image
 கர்ணன் காலத்தை வென்றவன் சிவாஜி சாவந்த் தமிழில் நாகலட்சுமி சண்முகம் 1339 பக்கங்கள் மின்நூல் மகாபாரதம் போன்ற வண்ணமயமான இதிகாசம் ஒன்று உலகின் வேறெந்த நாட்டிலும் இருக்குமா? தெரியவில்லை.  மகாபாரதத்தை மையப்படுத்தி பீமனின் பார்வையில் எம்டி வாசுதேவன் நாயரின் 'இரண்டாமிடம்', திரௌபதியின் பார்வையில் பிரதீபா ராயின் 'திரௌபதியின் கதை', பிரபஞ்சனின் 'மகாபாரதம்', எஸ் எல் பைரப்பாவின் 'பருவம்' நூல்களைத் தொடர்ந்து வாசிக்க கிடைத்த நூல் சிவாஜி சாவந்தின் 'கர்ணன்'.  மேற்கண்ட நூல்களைப் போன்று 'கர்ணன்' பெரிதாக ஒன்றும் ஈர்த்து விடவில்லை. மிகமிக சாதாரணமான மொழிநடை, தொலைக்காட்சி தொடருக்கு திரைக்கதை அமைத்தது போன்றுள்ளது.  கர்ணனின் தம்பி 'ஷோன்' கர்ணனது ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் போன்ற தகவல்களே புதியவையாக இருந்தன.  வியத்தகு ஆற்றல் கொண்டிருந்த போதிலும் 'சூதபுத்திரன்' என்றவாறு வாழ்வு முழுமையும் ஏளனப்படுத்தப்படுகிறான் கர்ணன்.  கர்ணனின் வளர்ப்பு தந்தை தேரோட்டி அதிரதன், அரச குலத்தை சேர்ந்தவராக தன்னை சொல்லிக் கொள்வது மற்றுமொரு புதிய தகவல்.  அணுகல்- விலகல் போரா...

நேர்காணல்கள்

Image
 தொ. பரமசிவன் நேர்காணல்கள் காலச்சுவடு பதிப்பகம்  159 பக்கங்கள்  கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருந்தபோதும், தனது கள ஆய்வுகளையும், பண்பாட்டு ஆராய்ச்சிகளையும் தமிழகக் கோயில்களைச் சார்ந்து அமைத்துக் கொண்ட தொ.பவின் நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல்.  சென்ற ஆண்டு காலச்சுவடு பதிப்பகம் தொ.பவின் நூல்களை மக்கள்  பதிப்புகளாக மிகமிகக் குறைவான விலையில் வெளியிட்டது. அவற்றுள் கடைசியாக வாசித்து முடித்த நூல் இது.  காஞ்சி காமாட்சியம்மன் கோயில், பௌத்தர்களின் சாரதா தேவி கோயிலாக இருந்தமை போன்ற தகவல்கள் முற்றிலும் புதியதாகவும், வியப்பளிப்பதாகவும் இருப்பவை.  திராவிட இயக்கங்கள் எழுச்சி பெற்ற 60களில் மாணவராக இருந்த தொ.ப, பகுத்தறிவு நிரம்பிய, முற்போக்கு சிந்தனை கொண்ட ஆராய்ச்சியாளராக பெருவாழ்வு வாழ்ந்திருக்கிறார். 'பொதுநலம் பேசுகிறவர்கள் தன்னுடைய கோப உணர்ச்சி கைவிட்டு விடக்கூடாது. அது போல மான அவமானம் பார்க்கக் கூடாது'.  'அப்படி எந்த எதிர்ப்பையும் மீறி செயல்பட்டவர் பெரியார்' என்று குறிப்பிடுகிறார்.  எளிய மனிதர்கள் வணங்கி மகிழும் நாட்டார் தெய்வங்களை குறித்து பெரும் ஈடுபாட்ட...

குறுநாவல்கள்

Image
 கறுப்பு வெள்ளைக் கடவுள்  தேவிபாரதி காலச்சுவடு பதிப்பகம்  191 பக்கங்கள்  தேவிபாரதியின் நான்கு குறு நாவல்களின் தொகுப்பு இந்நூல். துயரார்ந்த புனைவுகளுக்காகவே அறியப்படும் தேவிபாரதி சமகால எழுத்தாளுமைகளை புனைவில் நுழைத்து பகடியாக வடித்திருக்கும் கதை 'அ.ராமசாமியின் விலகல் தத்துவம்'.  'பலி' என்ற சிறுகதையின் நாடக வடிவம் மேடையேற்றப்படுவதற்கான முன்னெடுப்புகளாகவே நகரும் இக்கதை இறுதிவரை மேடையேற்றப்படவில்லை.  தான் வாழ்ந்த காலங்களில் மட்டுமின்றி, மரணத்திற்குப் பின் கடந்த 50 ஆண்டுகளாகவே கடவுளாக நீடிக்கும் பெருந்தலைவர் இரண்டாம் கதையில் குறியீடாகவே வருகிறார்.  27 வயது பெண் ஆசிரியை அனுபவிக்க நேரிடும் துன்பங்கள், இன்ஸ்பெக்டரின் வக்கிர எண்ணங்கள், பரதேசி, மாஸ்டரின் துயர்மிகு தருணங்கள், ஜேசிபி இயந்திரத்தைக் கையாளும் சிறுவன்வரை மிகையற்ற புனைவாகவே எண்ண முடிகிறது.  இத்தொகுப்பில் பெரிதும் பாதித்துவிட்ட கதை 'பரமனின் பட்டுப்பாவாடை உடுத்திய நான்காவது மகள்' தான். செல்வச்செழிப்பு இல்லாவிட்டாலும், அளவற்ற துறுதுறுப்புடன் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்ளும் சாதக அம்சங்களுடன், பிள்ளைப் ...

கட்டுரைகள்

Image
இதுவே சனநாயகம் தொ. பரமசிவன் காலச்சுவடு பதிப்பகம் 127 பக்கங்கள் சமூக பண்பாட்டு ஆய்வாளரான தொ.பரமசிவனின்  கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.  அரிய தகவல்களை எளிய மொழியில் நேர்த்தியாக எழுதிச் செல்கிறார் தொ.ப  கடவுள் வழிபாட்டின் தொடக்க காலத்தில் பெண்களே பூசாரிகளாக இருந்துள்ளனர் என்ற தகவல் புதிதாகத்தான் இருக்கிறது. மகாராணி, கோமகன் போன்ற வார்த்தைப் பிரயோகங்களும், மதுரை மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேகத் திருவிழா பற்றிய குறிப்பும் முதல் கட்டுரையிலேயே இடம்பெறுகின்றன.  சிறுதெய்வ வழிபாடு தொடர்ச்சியாக, உறுதியாக அழிக்கப்பட்டமையை அறிகையில் பெரும் அதிர்ச்சியும், ஆசுவாசமும் ஏற்படுகின்றன.  சிறுவயதில் வீட்டு பெரியவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி 'கோளறு பதிகம்' படித்திருக்கிறேன்.  //கிபி ஏழாம் நூற்றாண்டில் மதுரையில் ஆயிரம் சமணர்களை கழுவில் ஏற்றி சம்பந்தர் 'புண்ணியம்' தேடிக்கொண்ட பிறகும் தமிழ்நாட்டின் தென்பகுதியில் சமணம் பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை உயிரோடு இருந்தது.//  மேற்கண்ட வரிகளை வாசித்து முடித்த போது சம்பந்தர் பற்றிய மென்மையான பிம்பம் விழுந்து நொறுங்கியது.  அழிந்துபோனவ...

கதைகள்

Image
 பிறகொரு இரவு தேவிபாரதி காலச்சுவடு பதிப்பகம் 144 பக்கங்கள்  நுட்பமான வாசிப்பைக் கோரும் நான்கு கதைகளைக் கொண்ட தொகுப்பு இந்நூல்.  சம்பாபதி தெருக்களில் மரவுரி தரித்து இளந்துறவியாக தோழி சுதமதியுடன் அலைந்து திரியும் மேகலை, பெண்மையின் தீராத் துயரம் மற்றும் அடையாளச் சிக்கல்களுக்கான கடந்த காலத்தின் பெரும் அடையாளக் குறியீடு. காம வேட்கையுடன் அவளை அணுகும் உதயகுமாரன்,  அவளது துறவு அடையாளத்தையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. கனிகையர் ஒழுக்கத்தை அவளிடம் வலியுறுத்துகிறான். முதிர்க்கனிகை சித்ராபதி, அலங்காரங்களில் அவலத்தை மறைத்து இந்திரனை வீழ்த்துகிறாள். நட்பு, திருமண உறவின் தார்மீக அறங்களைத் தாண்டி நிகழும்  பாலியல் அத்துமீறல்களை உளவியல் நோக்குடன் அணுகும் இரு கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.  காலவோட்டத்தின் ஏதோ ஒரு புள்ளியில் தவறவிடப்படும் மணவாழ்வு பிரதிக்னை, தீராத துயரங்களையும், அலைக்கழித்துவிடும் பெரும் போராட்டங்களையும் தருவித்து விடுகிறது.  சிலிர்ப்பூட்டும் துவக்கத் தருணங்கள், நாளடைவில் எளிதில் விலக்கிவிட இயலாத பாரமாக எஞ்சிவிடுகிறது.  பெயரிடப்படாத அந்நபர் சாரு...

கல்வி

Image
 தமிழ்மொழிக் கல்வி  பதிப்பாசிரியர் சு ராஜாராம்  காலச்சுவடு பதிப்பகம்  215 பக்கங்கள்  முந்தைய 20 ஆண்டுகளில் (1994 -2014) காலச்சுவடு  இலக்கிய இதழ்களில் வெளியான கல்வி சார்ந்த 19 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.  உலகத் தொடர்பு மொழியாக ஆங்கிலம் நீடிக்கும்போதும் அம்மொழியை காலணிய மொழி என்றும், தமிழ் உள்ளிட்ட நமது மொழிகளை தாய்நில மொழிகள் என்றும் மிகவும் நயமாக வர்ணிக்கிறது இந்நூல்.  தாய்மொழிவழிக் கற்றலின் மூலமே சுயசிந்தனையும், படைப்பாற்றலும் இயல்பாக மேம்படும் என்று உலக அளவில் சிந்தனையாளர்களும், கல்வியாளர்களும் உறுதியாக, தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.  இருப்பினும் ஆங்கில வழிக் கல்வியையே பெற்றோர் பெரிதும் விரும்பி குழந்தைகளிடம் திணித்தல் ஏமாற்றமளிப்பதாகும்.  நமது தமிழகம் போன்றே கேரளமும் ஆங்கில வழிக் கல்வியை நாடுவது வியப்பளிக்கிறது.  அரசு பள்ளிகளையும், ஆசிரியர்களையும் ஒரு கட்டுரை கடுமையாக சாடுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.  பள்ளிக்கல்வி முழுமையும் தனியார் ஆங்கிலவழிக் கல்வியை நாடும் பெற்றோர், உயர்கல்விக்கும், வேலை வாய்ப்பிற்கும் அரசு...

கதைகள்

Image
 எம் வி வெங்கட்ராம் சிறுகதைகள் முழுத்தொகுப்பு  காலச்சுவடு பதிப்பகம்  1175 பக்கங்கள்  தனது படைப்புகள் குறித்த அளவற்ற பெருமிதமும், தனது வாசகர்கள் குறித்த தீர்க்க தரிசனமும் நிரம்பிய பெருங்கலைஞன் எம்.வி வெங்கட்ராம்.  வைக்கம் முகம்மது பஷீர் போன்றே வண்ணமயமான வாழ்வியல் அனுபவங்களால் நிறையப் பெற்றவர் எம்விவி.  106 கதைகளைக் கொண்ட இம்முழுத் தொகுப்பில் மூன்றில் ஒரு பங்குக்கு குறைவான எண்ணிக்கையில் புராணக் கதைகள் இடம் பெற்றுள்ளன.  புராணக் குறிப்புகளாலும், கற்பனைகளாலும் நிரம்பப் பெற்றவையாக அக்கதைகள் உள்ளன.  'குந்தி' அனைவரும் அறிந்த இதிகாசக் குறிப்பு எனினும் படைப்பாளியின் முத்திரையை இக்கதையில் அறிய இயலும். 'இதயங்களுக்கு பேசும் சக்தி ஏன் கொடுக்கப்படவில்லை?' என்ற கர்ணனின் கேள்விக்கு, 'பின்பு வேதனையை எப்படி உண்டாக்குவது?' என்று எதிர் கேள்வியை பதிலாக அளிக்கிறார் குந்தி.  மிகவும் இளைய வயதிலேயே புனைவு தளத்தில் நுழைந்துள்ள எம்விவி, முதிர்ந்த சிந்தனையுடன் வயது மூத்த தம்பதியரின் மன ஓட்டங்களை சித்தரித்துள்ள கதை 160.  85 வயதான கணவரையும், 75 வயதான மனைவியையும் குறித...