Posts

நாவல்

Image
ஆகாயத்தாமரை அசோகமித்திரன் நற்றிணை பதிப்பகம்  160 பக்கங்கள்  1970களின் சென்னை நகரத்தை நுட்பமாக காட்சிப்படுத்திவிடும் புனைவு இந்நூல்.  நகரத்துச் சூழல் ஆணின் வேலையின்மையை முற்றிலுமாக நிராகரித்து வேலையற்ற அவனது இருப்பினை கேள்விக்குள்ளாக்கி விடுகிறது.  ரகுநாதன் தற்காலிக பணி நீக்கத்தால் அதிர்ந்து மனம் போன போக்கில் செல்கிறான். மாலதியால் அவனது சிந்தனைகளுடன் உடன்பட இயலவில்லை.  மாலை நேரத்தில் குடிபோதையுடன் அவனிடம் அளவளாவும் ராஜப்பா, பிரிதொரு தருணத்தில் அலட்சியப்படுத்தி விரட்டுகிறார்.  மாலதியுடன் காரில் செல்பவன், ராஜப்பாவின் வீட்டிற்கே செல்ல நேர்வது அவனுக்கு வியப்பளிக்கிறது.  மகனது வேலை பறிபோவதை எளிதாக ஊகித்துவிடும் ரகுநாதனின் தாய் தொடர்ச்சியாக ஏற்படவிருக்கும் பொருளாதாரச் சிக்கல்களை எண்ணியும் வருந்துகிறாள்.  சிறுசிறு உதவிகளை அக்குடும்பத்திற்கு மெனக்கெட்டு செய்யும் பாலகிருஷ்ணன், ரகுநாதனால் உதாசீனப்படுத்தப்படுகிறார். தாயின் பேச்சிலுள்ள நியாயத்தை அவனது மனம் ஏற்கிறது.  ஜெமினி மேம்பாலம் கட்டப்படுதல், நேப்பியர் பாலம் விரிவாக்கப்படுதல் போன்ற அன்றைய செய்திகளை எ...

குறுநாவல்கள்

Image
 நண்பனின் தந்தை அசோகமித்திரன் நற்றிணை பதிப்பகம்  111 பக்கங்கள்  இரண்டு குறுநாவல்கள், மூன்று சிறுகதைகள் கொண்ட தொகுப்பு நூல் இது.  மிக மிக இயல்பான எளிய வார்த்தைகளைக் கொண்டு பெரும் புனைவை படைத்துவிடும் வல்லமை வாய்க்கப்பெற்றவர் அசோகமித்திரன்.  தயக்கம் நிறைந்த, கோழைத்தனம் கொண்ட கதை மாந்தர்கள் அவரது புனைவுகளில் நிலைபெற்றிருக்கிறார்கள்.  'ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே எப்படி ஒரு மனிதரை விழுங்க முடியும்?'  பிறப்பதற்கு முன்பே அப்பாவை இழந்து விடுகிற குழந்தைக்கு தமிழில் கடுமையான சொற்களில் அளிக்கப்படும் வசை குறித்த கவலை தோய்ந்த வரி மேற்கண்டது.  பணியாளனை கொதிக்கும் சோப்புக்கூழில் தள்ளிக் கொன்றுவிடும் மேற்பார்வையாளன், நள்ளிரவில், மழையில் இல்லம் தேடிவந்த பெண்ணை பத்திரமாக அவளது இருப்பிடத்தில் சேர்த்துவிட்டு வரும் பெண் என 'பம்பாய் 1944' குறுநாவல் மானிடரின் வன்மம் கருணை குறித்து உரையாடுகிறது.  புரிந்து கொள்ளவே இயலாத தொடர் நிகழ்வுகள், நம்ப முடியாத திருப்பங்கள் எனச் செல்லும் தனிநபர் வாழ்வில் இலக்கியவாசிப்பு பெரும் ஆசுவாசமாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் நீடிக்கிற...

மொழிபெயர்ப்பு

Image
இருட்டியபின் ஒரு கிராமம்  தமிழில் ஜி குப்புசாமி  வம்சி பதிப்பகம்  360 பக்கங்கள்  உலகின் குறிப்பிடத்தகுந்த 15 எழுத்தாளர்களின் 20 சிறுகதைகளின் தொகுப்பு நூல் இது.  தனது கலை வாழ்வின் உச்சத்தை அடைந்த படைப்பாளி,நம்ப முடியாத வீழ்ச்சியையும் அடைந்து, நிசப்தத்தை இசையின் மற்றுமொரு வடிவமாக எடுத்துக்காட்டி வாதிடும் கதை 'நிசப்தம்'. உண்மையை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வெளிப்படுத்தலாம் என்கிறான் அக்கலைஞன்.  சூதாட்டக்காரனாகவும், பெருந்தீனிக்காரனாகவும் அறியப்படும் தெலாகூ, நகராட்சி அறிமுகம் செய்யும் குளியலறை திட்டத்தின் 40 சந்தாதாரர்களில் ஒருவராகிறார். ஒவ்வொருவரும் மரணம் அடைகையில் அவருக்குரிய வட்டித்தொகை உயிருடன் நீடிக்கும் பிற சந்தாதாரர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. தெலாகூ பிறர் மரணத்தை விரும்பி எதிர் நோக்குகிறார்.  இளமைப் பருவ தன்னம்பிக்கைக்காரர்கள், வாலிப வயதிலும், தொடர்ந்த முதிய வயதிலும் வாழ்வின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல் தளர்ந்து விடுவதை நினைவுபடுத்துகிறார் 'இருட்டியபின் ஒரு கிராமம்' கதையில் வரும் பிளெட்சர்.  அசோகமித்திரன் கதை ஒன்றில் குழுவாக சிறுவ...

கட்டுரைகள்

Image
 பல்வங்கர் பலூ மின்நூல் 112 பக்கங்கள் கிரிக்கெட் தோன்றிய வரலாற்றிலிருந்து ஆரம்பித்து, இந்தியாவில் மத அடிப்படையில் குழுக்கள் தோன்றியமை, ஆங்கிலேயர்களின் மேலாதிக்கம், ஒடுக்கப்பட்ட பிரிவினர் மீதான வன்மம் வரை விளக்கிச் செல்லும் நூல் இது. முதல் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று திறமையாகப் பங்களித்த பலூவின் சாதனைகள் குறித்த பதிவுகள் மறைக்கப்பட்டிருப்பது மிகவும் கொடுமை. மூன்று ரூபாய் மாத சம்பளத்திற்கு மைதானத்தைப் பெருக்கி சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ளும் பலூவை கிரிக்கெட் வசீகரித்ததில் ஆச்சரியம் இல்லை.  ஆங்கிலேயர்களுக்குப் பந்து வீசி பயிற்சி தந்து உதவி அவர் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.  இந்து கிரிக்கெட் கிளப்பின் தொடர் தோல்விகள் அவருக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தபோதும் தரையில் அமர வைத்து உணவு அளித்ததும், மைதானத்திற்கு வெளியே மண் குவளையில் தேநீர் அளிக்கப்பட்டதையும் வாசித்த போது மனம் கனத்தது.  பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு அளிக்கும் பிற்போக்கான அன்றைய சமூகக் கட்டமைப்பை நினைக்கையில் கலக்கம் ஏற்படுகிறது.  வினோத் காம்ப்ளி, நடராஜன் போன்ற வீரர்களுக...

கட்டுரைகள்

Image
 எங்கேயும் எப்போதும் எஸ்பிபி நினைவலைகள் தொகுப்பு அரவிந்தன் காலச்சுவடு பதிப்பகம் 143 பக்கங்கள் 14 எழுத்தாளுமைகளின் கட்டுரைகள், எஸ்பிபி சரணின் நேர்காணல் அடங்கிய நூல் இது.  ஒவ்வொருவரின் எழுத்திலும் எந்த ஒரு தரவும் 'கூறியதுகூறல்' வகையினதாக அமையவில்லை.  அப்பெருங்கலைஞன் மீதான பிரம்மிப்பும், வற்றாத அன்பும் மட்டுமே எல்லா கட்டுரைகளிலும் பொதுவாக அமைந்துவிட்ட அம்சங்கள்.  காலச்சுவடு இதழில் முன்பே இடம்பெற்றுவிட்ட சில கட்டுரைகளைத் திரும்ப வாசித்த போதும் அலுப்பு ஏதும் தோன்றவில்லை.  எழுத்தில் வடிக்கும் திறன் பெற்றிருப்பின் இதுபோன்ற லட்சக்கணக்கான கட்டுரைகள் எஸ்பிபி அபிமானிகளிடமிருந்து குவிந்திருக்கும்.  90களின் துவக்கத்தில் இனம் புரியாத சோகங்களுக்கு பதின் வயதிலேயே ஆட்பட்ட தருணங்களில் 'உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்....' பாடலின் மூலம் தேற்றி அரவணைத்த குரல் அது எனக்கு.  2000 களின் துவக்கத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சிக்கு ஒரேயொரு மதிப்பெண் குறைவாகப் பெற்று, அரசுப் பணியை இழந்த நிலையில், மனமுடைந்து போய் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில் ...

நாவல்

Image
 கோவேறு கழுதைகள் இமையம் மின்நூல் 376 பக்கங்கள் உடல் உழைப்பையே வாழ்வாதாரத்திற்கான வழியாகக் கொண்ட விளிம்புநிலை மக்களை அவர்தம் உன்னதப் பணிகளை புதினமாக படைத்திருக்கிறார் இமையம்.  கொத்தடிமைகள் போன்று பணியாற்ற நிர்பந்திக்கப்படும் மனிதர்கள், தமது வாழ்விற்கான மிகமிகக் குறைந்த தேவைகளுக்காக இரப்பவர்கள் போன்று சிறுமைப்படுத்தப்படுவதை சமூகம் கள்ள மௌனத்துடன் அவதானித்துக் கொண்டேதான் இருக்கிறது.  நாவலின் துவக்கத்தில் இழவு வீட்டில் ஓடியாடி பணிகளைக் கவனிக்கும் சவுரி, தொடர்ச்சியாக வீட்டுக்காரனின் வார்த்தைகளால் அவமதிக்கப்படுகிறான். முடிவில் அவனது கூலியும் பேரத்திற்கு உள்ளாகிவிடுகிறது.  பிரசவம் பார்க்கச் செல்லும் 'ஆரோக்கியம்', அப்பெண்ணின் சுடு சொற்களையும், அத்துமீறல்களையும், கனிவுடன், மெல்லிய புன்னகையுடன் பொருட்படுத்தாமல் பணியை நிறைவு செய்கிறாள்.  வட்டார மொழிநடை நாவலுக்கு பெரும்பலமாக அமைந்துவிடுகிறது. எளிய மனிதர்களின் துன்பமிகு வாழ்வியலை இமையம் கலையாக வாசகனிடம் முன் வைக்கிறார். 'உங்க வண்ணாத்தி சாமி' 'உங்களை அண்டி பிழைப்பவ அய்யா' போன்ற வரிகள் பெரும் வலியை ஏற்படுத்துபவை.  துணிகளை...

கதைகள்

Image
 பொன்னுலகம் சுரேஷ் பிரதீப் அழிசி பதிப்பகம் 172 பக்கங்கள் சுரேஷ் பிரதீப்பின் 10  சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இந்நூல்.  'இழந்த பின்னும் இருக்கும் உலகம்' என்றொரு கட்டுரையை பல ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். கவிஞர் சுகுமாரன் எழுதிய கட்டுரை அது. பள்ளி நினைவுகள் குறித்த அக்கட்டுரை மிகவும் ஈர்த்தது.  இத்தொகுப்பின் முதல் கதை 'வேம்பு' அவ்வாசிப்பை நினைவுபடுத்தியது. நண்பர்களுடனான உரையாடல்கள், தூய்மையான ஈர்ப்புகள், ஆசிரியர்கள் மீதான அபிமானங்கள், மோதல்கள் என எத்தனைையோ தருணங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் நிரம்பியுள்ளன.  முழுமையாக அறிந்து உணர இயலாத தரவுகள் அமானுஷ்யங்களாகவே நீடித்து விடுகின்றன. 'கற்றாழைக் கிணறு' அவ்வகையில் அமைந்துவிட்ட நல்ல புனைவு.  பெருந்தினையும், கைக்கிளையும் இல்லாத மனித வாழ்வு ஏது? 'மோகமுள்' யமுனாவை ஓரளவு நினைவுபடுத்தி விடுகிறார் 'பூரணி'.  குளிர்ந்த நிழல் போன்ற பாதுகாப்பு உணர்வை, ஆசுவாசத்தை அளிக்கும் இல்லத்திற்கு மூத்த பெண்கள் தமக்கேயுரிய  மன அழுத்தங்களை பகிர இயலாதவர்களாகவே இருக்கின்றனர். இறுதி அத்தியாயத்திற்கு பிறகு எத்தனையோ விடயங்கள் தெரிய வருக...