கயிறு
'கயிறு' - 'மண்மீது மனிதனுக்கிருந்த நேசம்' தகழி சிவசங்கரப் பிள்ளை தமிழில் சி ஏ பாலன் சாகித்ய அகாடமி வெளியீடு 1504 பக்கங்கள் மனிதனின் லெளகீக விருப்புகளில் மண் மீதான அவனது மோகத்திற்கு முக்கிய இடமுண்டு. தனக்கென சிறு இடமொன்று தேடுவதில் துவங்கி, நீளத்துவங்கும் எல்லையற்ற பிரயாசைகள் அவனைப் பெரும் சங்கடங்களுக்கு இட்டுச்செல்லும் சாத்தியங்களும் உண்டு. மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் கேரளத்தின் குட்டநாடு பகுதிக்கு 'கிளாசிப்பேர்' என்றழைக்கப்படும் 'Classifier' கொச்சுப்பிள்ளை மன்னரின் சார்பாக 'கண்டெழுத்து' பணிக்கு நியமிக்கப்படுகிறார். கண்டு எழுதுவதால் அப்பணி 'கண்டெழுத்து' என அழைக்கப்படுகிறது. நிலப்பகுதிகளை அடையாளமிட்டு அப்பகுதியில் குறிப்பிடத்தகுந்த பிரதிநிதிகளாக விளங்கும் கோந்நோத்து, கோடாந்திர, சீரட்ட உள்ளிட்ட குடும்பத்தினருக்கு கண்டெழுத்து தரப்படுகிறது. 'எருமத்ர மடம்' கிளாசிப்பேரும் அவரது மனைவி குஞ்சு லட்சுமியம்மாவும் தங்குவதற்கு ஆரம்ப எதிர்ப்புகளை மீறி வழங்கப்படுகிறது. மக்களுக்கு ராஜாங்க செய்திகளை அறிவிக்கும் பணியில் 'முல்லக்கா...